சினிமா

2.O டீசருக்கு நேரம் குறித்த சங்கர்

விநாயகர் சதுர்த்தியை அன்று சங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘2.O’ படத்தின் டீசர் வெளியிடப் படம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. #2Point0Teaser

ரஜினிகாந்த் இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகி உள்ள படம், ‘2.O.’  கடந்த 2010-ல் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி உள்ளது. இதில் ரஜினிகாந்த் ஜோடியாக எமிஜாக்சனும் வில்லனாக இந்தி நடிகர் அக்‌ஷய்குமாரும் நடித்துள்ளனர்.

இப்படத்தை நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியிட இருப்பதாகவும் இயக்குனர் சங்கர் அறிவித்தார். மேலும் இப்படத்தின் டீசரை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 13ம் தேதி வெளியிட இருப்பதாக அறிவித்திருந்தார். தற்போது இதன் டீசரை (செப்டம்பர் 13) நாளை காலை 9 மணிக்கு வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

இதுதவிர இந்த டீசரை பிவிஆர் மற்றும் சத்யம் திரையரங்குகளில் இலவசமாக பார்க்க ரசிகர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. #Rajinikanth #2PointO #2PointOTeaser

SCROLL FOR NEXT