சினிமா

‘2.ஓ’ படக்குழுவினர் ரஜினி பிறந்தநாளில் ரசிகர்களுக்கு கொடுக்கும் ஸ்பெஷல் விருந்து

ரஜினி பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்கு ‘2.ஓ’ படக்குழுவினர் ஸ்பெஷல் விருந்து ஒன்றை கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இயக்குனர் ஷங்கர் தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்த படத்தை மெருகூட்டுவதற்கான பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை ரஜினியின் பிறந்தநாளான டிசம்பர் 12-ந் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

அதற்கு முன்னதாகவே, இப்படத்தின் ஆடியோ வெளியீடு வரும் அக்டோபர் மாதம் தீபாவளியையொட்டி துபாயில் பிரம்மாண்டமாக நடத்த படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அன்றைய தேதியில் இப்படத்தின் டீசரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT