பிக்பாஸ்கட் நிறுவனம் பி.பி எக்ஸ்பிரஸ் சேவையை அடுத்த மாதம் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த சேவையின்படி வாடிக்கையாளர்களுக்கு 1 மணி நேரத்திற்குள் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிக்பாஸ்கெட் பிபி நவ் என்ற சேவையையும் வழங்கி வருகிறது. இதில் 20 நிமிடங்களில் மளிகை பொருட்கள் டெலிவரி செய்யப்படுகின்றன. ஆனால் இந்த சேவையின் கீழ் 3,500 வகையான பொருட்கள் வரை மட்டுமே டெலிவரி செய்யப்பட்டு வந்தன. தற்போது தொடங்கப்படவுள்ள பிபி எக்ஸ்பிரஸ் சேவையின் கீழ் 8000 வகையான பொருட்கள் டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பிபி நவ் சேவையில் 450 ரூபாய்க்கு மேல் பொருட்களை வாங்குபவர்களுக்கு மட்டும் டெலிவரி செய்யப்பட்டு வந்த நிலையில், பிபி எக்ஸ்பிரஸில் 800 ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு மட்டுமே டெலிவரி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.