அப்ரிலியா SXR 125 
ஆட்டோமொபைல்

அப்ரிலியா SXR 125 இந்திய விலை விவரம்

அப்ரிலியா SXR 125 மேக்சி ஸ்கூட்டர் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

மாலை மலர்

அப்ரிலியா நிறுவனம் தனது SXR 125 மேக்சி ஸ்கூட்டர் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய SXR 125 மாடலுக்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. அப்ரிலியா SXR 125 முன்பதிவு கட்டணம் ரூ. 5 ஆயிரம் ஆகும். 

விரைவில் அறிமுகமாக இருக்கும் நிலையில், புதிய அப்ரிலியா ஸ்கூட்டர் இந்திய விலை விவரங்கள் வெளியாகி உள்ளது. அதன்படி புதிய அப்ரிலியா SXR 125 மாடல் விலை ரூ. 1.16 லட்சம், எக்ஸ்-ஷோரூம் என கூறப்படுகிறது. இது SXR 160 மாடலை விட ரூ. 9 ஆயிரம் குறைவு ஆகும்.

அறிமுகமானதும் புதிய அப்ரிலியா SXR 125 மாடல் சுசுகி பர்க்மேன் ஸ்டிரீட் 125 மாடலுக்கு போட்டியாக அமையும். டிவிஎஸ் என்டார்க் ரேஸ் எடிஷன் இந்த மாடலுக்கு போட்டியாக இருக்காது என்றாலும் இது அப்ரிலியா SXR 125 மாடலை விட ரூ. 38 ஆயிரம் விலை குறைவு.