இது புதுசு

டெஸ்லா அறிமுகம் செய்த பறக்கும் கார் - தலைகீழாக மேலே சென்று, விமானம் போல் தரையிறங்கிய ரோட்ஸ்டர் கார்

டெஸ்லா நிறுவனம், 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு, தனது புதிய ரோட்ஸ்டர் (Roadster) கார்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட டெஸ்லா நிறுவனம், சூப்பர் கார்களுக்கு போட்டியாக அதிநவீன செயல்திறனுடன் ராக்கெட் உத்வேக தொழில்நுட்பத்துடன் இயங்கும் புதிய ரோட்ஸ்டர் மின்சார எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது.

எலான் மஸ்கின் கார் உற்பத்தி நிறுவனமான டெஸ்லா, 2017-ஆம் ஆண்டிற்கு பிறகு, 2028-இல் தனது புதிய ரோட்ஸ்டர் (Roadster) கார்களை அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரோட்ஸ்டர் கார் 3 மாடல்களில் அறிமுகம்

அந்த வகையில் சந்தையில் அறிமுகம் செய்யப்படவுள்ள ரோட்ஸ்டர் கார்கள் பெர்ஃபார்மன்ஸ், த்ரஸ்ட் மற்றும் ராக்கெட் என மூன்று பதிப்புகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை மாடலான பெர்ஃபார்மன்ஸ் காரில் ராக்கெட் த்ரஸ்டர்கள் இடம்பெறாது எனவும், இதற்கு அடுத்த மாடலான த்ரஸ்ட் பதிப்பில் அதிவேகத்துடன் செயல்படும் சில பூஸ்டர்கள் பொருத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராக்கெட் மாடல்

உயர் தர மாடலான ராக்கெட் பதிப்பில், ஒரு விமான அமைப்பை போன்ற 10 த்ரஸ்டர்கள் இடம்பெறும் என டெஸ்லா தெரிவித்துள்ளது.

இந்த மாடலில் அழுத்தப்பட்ட வாயு பயன்படுத்தப்படும் வகையிலும், மேலும் வாயுக்களை மீண்டும் நிரப்புவதற்காக வாகனத்தில் உள்ள கம்ப்ரஸ்கர்கள் (compressors) வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த மூன்று பதிப்புகளிலும் 2G வரை கீழ்நோக்கிய விசையை உருவாக்கும் விசிறியால் இயங்கும் உறிஞ்சும் அமைப்பு இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வகையான கார்கள், பொது சாலை விதிமுறைகளுக்கு இணங்கும் வகையில் எவ்வாறு செயல்படும் என டெஸ்லா இன்னும் விளக்கவில்லை.

எலான் மஸ்க்

இந்த ரோட்ஸ்டர் கார் குறித்து எலான் மஸ்க் கூறுகையில், இது 0.81 வினாடிகளில் 100 கிலோமீட்டர் வேகம் வரை இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

விலை

அடிப்படை மாடலான பெர்ஃபார்மன்ஸ் பதிப்பை பெறுவதற்கு 50,000 அமெரிக்க டாலர் முன்பணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்த மாடலான த்ரஸ்ட் பதிப்பிற்கு 2,50,000 அமெரிக்க டாலர் முன்பணமான நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உயர்தர மாடலான ராக்கெட் பதிப்பு, சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக டெஸ்லா தெரிவித்துள்ளது.

மேலும் இந்த மாடலில், டிரைவர் மட்டுமே அமர்ந்து காரை இயக்கும் வகையில் ஒரு இருக்கை வசதியுடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT