இது புதுசு

க்ரூயிஸ் கண்ட்ரோல் வசதியுடன் உருவாகும் ஹிமாலயன் 750

விற்பனைக்கு வரும் போது இந்த பைக் கிராஸ் ஸ்போக் வீல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

ராயல் என்பீல்டு நிறுவனம் இந்திய சந்தையில் முதல் முறயாக ஹிமாலயன் 750 மாடலை காட்சிப்படுத்தியது. லடாக்கில் நடைபெற்ற ஹிமாலயன் பேஸ் கேம்ப் நிகழ்ச்சியில் இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது வரை இந்த பைக் அதன் உற்பத்திக்கு முந்தைய நிலையிலேயே உள்ளது.

எனினும், இந்த மாடல் தற்போது உற்பத்திக்கு கிட்டத்தட்ட தயாரான நிலையை அடைநேதிருக்கலாம் என்று தெரிகிறது. முன்னதாக ஹிமாலயன் 750 மாசஸ் டெஸ்டிங் செய்யப்படும் புகைப்படங்கள் பலமுறை இணையத்தில் லீக் ஆகியிருக்கின்றன.

முழுமையாக உற்பத்திக்கு நிறைவுற்ற ஹிமாலயன் 750 மாடல் வருகிற நவம்பர் மாதம் நடைபெற இருக்கும் EICMA 2026 நிகழ்வில் வைத்து புதிய அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

சிறப்பு அம்சங்கள்:

காட்சிப்படுத்தப்பட்ட புதிய ஹிமாலயன் 750 மாடலில் க்ரூயிஸ் கண்ட்ரோல், டயர் பிரெஷர் மாணிட்டரிங் சிஸ்டம், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய முன்புற சஸ்பென்ஷன், டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்படுகிறது. அந்த வகையில், க்ரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் டி.பி.எம்.எஸ். அம்சங்களுடன் வரும் முதல் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிளாக இது இருக்கும்.

இந்த பைக்கின் முன்புறம் 19-இன்ச் வீல், பின்புறம் 17-இன்ச் வீல் வழங்கப்படுகிறது. இத்துடன் ரெடிஸ்டைன் சென்ட்யூரோ டயர்கள் வழங்கப்படுகின்றன. முந்தைய ஸ்பை படங்களில் இந்த பைக் அலாய் வீல்களை கொண்டிருந்தன. எனினும், விற்பனைக்கு வரும் போது இந்த பைக் கிராஸ் ஸ்போக் வீல்களுடன் வரும் என்று எதிர்பார்க்கலாம்.

சேசிஸ் மற்றும் ஹார்டுவேர்:

ஹிமாலயன் 750 மாடல் முற்றிலும் புதிய ஃபிரேம் மற்றும் ஸ்விங்ஆர்ம் உடன் வரும். இது பெரிய மோட்டார்சைக்கிளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டதாக இருக்கும். இதன் பின்புறத்தில் டுவின் ஷாக் அப்சார்பர்களுக்கு மாற்றாக டுவின் சிலிண்டர் ராயல் என்பீல்டு பைக்கில் முதல் முறையாக மோனோஷாக் யூனிட் வழங்கப்படுகிறது. சஸ்பென்ஷனுக்கு முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய யூனிட், பிரேக்கிங்கிற்கு முன்புறத்தில் இரு டிஸ்க்குகள், பின்புறம் ஒற்றை டிஸ்க் வழங்கப்படுகிறது.

என்ஜினை பொருத்தவரை புதிய 750 யூனிட் நீண்ட காலமாக தயாரிப்பு கட்டத்திலேயே உள்ளது. இது 650 சிசி பேரலல் டுவின் என்ஜினின் சற்றே பெரிய வெர்ஷனாக இருக்கும். செயல்திறனை பொருத்தவரை இந்த யூனிட் 50 ஹெச்பி பவர் மற்றும் 64 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தம் என தெரிகிறது.

SCROLL FOR NEXT