ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் அறிமுகமாகி 20 ஆண்டுகள் ஆனதை கொண்டாடும் வகையில், அதன் சிறப்புப் பதிப்பு ஒன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
'தி ட்வென்டி எடிஷன்' என்று அழைக்கப்படும் இந்த மாடலில், ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SV சீரிசில் இருந்து பெறப்பட்ட பிரத்யேக 'ட்வென்டி' விவரங்கள், முதன்மை பவர்டிரெய்ன்கள் மற்றும் செயல்திறன் மிக்க இருக்கைகள் இடம்பெற்றுள்ளன.
இது மேம்படுத்தப்பட்ட வெளிப்புற விவரங்கள், செம்மைப்படுத்தப்பட்ட உட்புற அம்சங்கள் மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பவர்டிரெய்ன் தேர்வுகளை அறிமுகப்படுத்துகிறது.
அசல் 'ஸ்டார்மர்' ஆரஞ்சு ரேன்ஜ் ஸ்டார்மர் கான்செப்ட் மற்றும் வெசுவியஸ் ஆரஞ்சு ஃபர்ஸ்ட் எடிஷன் ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆகியவற்றில் இருந்து உத்வேகம் பெற்று இந்த ட்வென்டி எடிஷன் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
sபுதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் சான்டோரினி பிளாக் மற்றும் ஒஸ்டுனி ஒயிட் உள்ளிட்ட பரந்த வண்ண தேர்வுகளுடன், ஒரு துணிச்சலான, அதி-உலோக தன்மையுள்ள சங்குனெல்லோ ஆரஞ்சு ஃபினிஷில் கிடைக்கிறது.
இவற்றை தவிர்த்து மேலும் நுட்பமான மாடலை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு பிளாக் எக்ஸ்டீரியர் பேக் உள்ளது. இந்த வெர்ஷனில் 'TWENTY' என்ற பொறிப்பு மற்றும் 23-இன்ச் ஸ்பார்க்கிள் சில்வர் வீல்களை கொண்டிருக்கிறது. இதன் உள்புறத்தில், ஒளிரும் 'TWENTY' ட்ரெட்பிளேட்டுகள் மற்றும் 'TWENTY' சென்டர் கன்சோல் எழுத்துக்கள் வழங்கப்படுகின்றன.
ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் ஆட்டோபயோகிராஃபி வேரியண்ட்டை அடிப்படையாக கொண்டு, பிரேக்கிங் மூலம் டார்க் வெக்டரிங் செய்யும் எலக்ட்ரானிக் ஆக்டிவ் டிஃபரன்ஷியல், ஆல்-வீல் ஸ்டீயரிங், டெரெய்ன் ரெஸ்பான்ஸ் புரோகிராம்கள் மற்றும் டைனமிக் ஏர் சஸ்பென்ஷன் ஆகியவை வழங்கப்படுகின்றன.
இதன் உள்புறம், செயல்திறன் மிக்க முதன்மை மாடலான ரேன்ஜ் ரோவர் ஸ்போர்ட் SV-இல் இருந்து பெறப்பட்ட எபோனி வின்ட்சர் இருக்கைகள் இடம்பெற்றுள்ளன. எடை குறைந்த, நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மற்றும் மோட்டார் பந்தயத்தால் ஈர்க்கப்பட்ட இந்த இருக்கைகள், துல்லியமாக வடிவமைக்கப்பட்ட பயன்பாட்டு வசதியை ஆடம்பர கைவினைத்திறனுடன் இணைக்கின்றன.
புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் 4.4-லிட்டர் ட்வின் டர்போ V8 மைல்ட் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் கொண்டிருக்கிறது, இது 529bhp பவர், 750 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த கார் மணிககு 100 கிலோமீட்டர்கள் வேகத்தை வெறும் 4.5 வினாடிகளில் எட்டிவிடும்.