இது புதுசு

ஃபுல் சார்ஜில் 535கி.மீ. செல்லும் ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் கார் அறிமுகம்

புதிய எலெக்ட்ரிக் மாடலில் வெறும் 10 நிமிடங்கள் சார்ஜ் செய்து 220 கிலோமீட்டர்கள் பயணிக்க செய்கிறது.

ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் தனது முதல் முழுமையான மின்சார மாடலான ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. முந்தைய உலகளாவிய அறிமுகங்களைப் போல் சர்வதேச வெளியீட்டுக்கு பிறகு சில மாதங்கள் வரை தாமதம் செய்யாமல், புதிய மாடலுக்கான முன்பதிவுகள் இந்தியாவிலும் தொடங்கியுள்ளன.

இந்த எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர், இங்கிலாந்தில் உள்ள அந்த நிறுவனத்தின் சோலிஹல் ஆலையில் தயாரிக்கப்படுகிறது. 1970 முதல் ரேன்ஜ் ரோவரை உற்பத்தி செய்து வரும் அதே ஆலையில்தான் இது தயாரிக்கப்படுகிறது, மேலும் இது அந்த நிறுவனத்தின் முதன்மை மாடலாகவும் விளங்குகிறது.

மோட்டார் மற்றும் பவர்:

புதிய எலெக்ட்ரிக் ரேன்ஜ் ரோவர் மாடலில் 349hp பவர் வெளிப்படுத்தும் டூயல் நிரந்தர-காந்த மோட்டார்களில் இருந்து பெறப்படுகிறது. இவை ஒருங்கிணைந்து 543hp வரையிலான பவர், 850 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இது, இதற்கு முந்தைய எந்த ரேன்ஜ் ரோவர மாடலையும் விட இந்த எஸ்யூவி-க்கு அதிக டார்க் மற்றும் சத்தமில்லாத செயல்திறனையும் அளிப்பதாக ரேன்ஜ் ரோவர் கூறுகிறது.

இதில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டார்கள், 800-வோல்ட் கட்டமைப்பில் இயங்கும் இரட்டை அடுக்கு 118.5kWh பேட்டரியுடன் இணைக்கப்பட்டுள்ளன. இது சுமார் 22 நிமிடங்களில் 10 முதல் 80 சதவீதம் வரை DC ஃபாஸ்ட் சார்ஜிங் செய்ய உதவுகிறது, அல்லது 350kW சார்ஜரில் வெறும் 10 நிமிடங்களில் சுமார் 220 கிலோமீட்டர்கள் பயண தூரத்தை சேர்க்கிறது.

வேரியண்ட் விவரங்கள்:

மின்சார சக்திக்கு மாறிய போதிலும், ரேன்ஜ் ரோவர் இந்த மாடலின் பாரம்பரிய ஆஃப்-ரோடு திறனை பாதுகாக்க ஒருங்கிணைந்த டிராக்‌ஷன் மேனேஜ்மென்ட் சிஸ்டம், மாறும் பரப்புகளுக்கு 50 மில்லி விநாடிகளுக்குள் எதிர்வினையாற்றுகிறது. மேலும் ஒற்றை பெடல் டிரைவிங் மோட் இந்த SUV-ஐ 45 டிகிரி வரையிலான சரிவுகளில் ஏற அனுமதிக்கிறது. ரேன்ஜ் ரோவரின் வழக்கமான அனைத்து நிலப்பரப்பு அளவுகோல்களுக்கு இணங்க, நீரில் செல்லும் ஆழம் 900 மில்லிமீட்டர் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக், ஸ்டாண்டர்ட்-வீல்பேஸ் ஆட்டோபயோகிராஃபி டிரிம் அல்லது லாங்-வீல்பேஸ் SV, SV அல்ட்ரா மற்றும் SV பிளாக் வேரியண்ட்டுகளுக்கு இடையே தேர்வு செய்யலாம். இவற்றுடன், பெல்கிரேவியா கிரீன், சாண்டோரினி பிளாக் அல்லது வரேசைன் ப்ளூ நிறங்களில், புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இன்டீரியர் டிரிம்முடன் கூடிய ஃபர்ஸ்ட் எடிஷன் மாடலும் உள்ளது. ரேஞ்ச் ரோவர் தனது WLTP-மதிப்பிடப்பட்ட 600 கிலோமீட்டர் அளவிற்கு பதிலாக, இந்த எஸ்யூவி நிஜ உலகில் 535 கிலோமீட்டர் வரை பயணிக்கும் என உறுதியளிக்கிறது.

இந்தியாவில் ரேன்ஜ் ரோவர் எலெக்ட்ரிக் மாடலின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், இந்த எஸ்யூவி, இந்தப் பிரிவில் மெர்சிடிஸ்-பென்ஸ் EQS எஸ்யூவி, வால்வோ EX90 மற்றும் பிஎம்டபிள்யூ iX போன்ற முழுமையான மின்சார சொகுசு எஸ்.யூ.வி.க்களுடன் போட்டியிடும்.

SCROLL FOR NEXT