இது புதுசு

642 கி.மீ. ரேன்ஜ் வழங்கும் புது போர்ஷே எலெக்ட்ரிக் கார்... இந்தியா வெளியீடு எப்போ தெரியுமா?

ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருப்பதால், காரின் ஒட்டுமொத்த ரேன்ஜ் அதிகரிக்கும்.

போர்ஷே நிறுவனம் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு தொடக்கத்தில் போர்ஷே இந்த காரின் விலை விவரங்களை அறிவித்தது. அதன்படி இந்திய சந்தையில் போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் மாடலின் விலைகள் ரூ. 1.77 கோடி (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது.

இந்திய வெளியீடு மற்றும் விலையை தொடர்ந்து போர்ஷே தனது Cayenne எலெக்ட்ரிக் இந்திய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது. அந்த வகையில் போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் மாடல் இந்திய சந்தையில் செப்டம்பர் 30-ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த எஸ்.யூ.வி. மாடல் ஸ்டான்டர்டு மற்றும் டர்போ எலெக்ட்ரிக் என இருவித வேரியண்ட்களில் கிடைக்கும்.

Cayenne எலெக்ட்ரிக் அம்சங்கள்:

அளவீடுகளில் புதிய போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் மாடல் 4985 மில்லிமீட்டர் நீளம், 1980 மில்லிமீட்டர் அகலம் மற்றும் 1674 மில்லிமட்டர் உயரம் கொண்டுள்ளது. இதன் வீல்பேஸ் 3023 மில்லிமீட்டரில் உள்ளது. தோற்றத்தில் இந்த கார் வழக்கமான முன்புற கிரில் நீக்கப்பட்டு ரீடிசைன் செய்யப்பட்ட பம்ப்பர் கொண்டிருக்கிறது. முன்புறம் மூடப்பட்ட பேனலில் பம்ப்பர் இடம்பெற்றுள்ளது.

பக்கவாட்டில் இந்த மாடல் தற்போது விற்பனையில் உள்ல மாடலை போன்றே காட்சியளிக்கிறது. எனினும், இந்த கார் தற்போது 20-22 இன்ச் அலாய் வீல் ஆப்ஷன்களுடன் வரும் என்று தெரிகிறது. இதன் வீல்கள் ஏரோடைனமிக் டிசைன் கொண்டிருப்பதால், காரின் ஒட்டுமொத்த ரேன்ஜ்-ஐ அதிகப்படுத்தும்.

இத்துடன் காரின் பின்புறம் அதிகளவில் மாற்றங்கள் செய்யப்பட்டு, சற்றே கூர்மையான டெயில் லைட் செட்டப், மெல்லிய எல்.இ.டி. லைட் பார் வழங்கப்படுகிறது. இதன் பின்புற பம்ப்பரின் கீழ்புறத்தில் பிளாக்டு-அவுட் டிஃப்யூசர் வழங்கப்படுகிறது. உள்புறத்தில் பட்டன்கள் எதுவும் இல்லாத சென்டர் கன்சோல் மற்றும் அதன் கீழ்புறத்தில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளது. ஸ்கிரீன் அளவுகளை பொருத்தவவரை 14.5 இன்ச் சற்றே வளைந்த இன்ஃபோடெயின்மென்ட் ஸ்கிரீன் மற்றும் 14.9 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி ஹெட்-அப் டிஸ்ப்ளே உள்ளது.

இத்துடன் 14-ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், 20 ஸ்பீக்கர்கள் கொன்ட ஹார்மன் கார்டன் சிஸ்டம் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

பேட்டரி மற்றும் ரேன்ஜ்:

புதிய போர்ஷே Cayenne எலெக்ட்ரிக் மாடலில் 113 கிலோவாட் ஹவர் பேட்டரி யூனிட் மற்றும் டூயல் எலெக்ட்ரிக் மோட்டார்கள் உள்ளன. இத்துடன் ஆல்-வீல் டிரைவ் செட்டப் வவங்கப்படுகிறது. இதன் ஸ்டான்டர்டு மாடல் 642 கிலோமீட்டர்கள் வரையிலும், ஸ்போர்ட் டர்போ எலெக்ட்ரிக் வேரியண்ட் அதிகபட்சம் 623 கிலோமீட்டர்கள் வரையிலும் செல்லும் என தெரிகிறது.

இந்த எஸ்.யூ.வி. மாடலில் அடாப்டிவ் ஏர் சஸ்பென்ஷன் கொண்டுள்ளது. இத்துடன் ரியர் வீல் ஸ்டீரிங் விரும்புவோர் தேர்வு செய்யும் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது. புதிய Cayenne எலெக்ட்ரிக் மாடல் 11 கிலோவாட் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்ட முதல் போர்ஷே கார் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.

செயல்திறனை பொருத்தவரை இந்த காரின் ஸ்டான்டர்டு மாடல் 402 ஹெச்.பி. பவர், 835 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 4.8 நொடிகளில் எட்டுவதோடு, அதிகபட்சம் மணிக்கு 230 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

இதன் டர்போ எலெக்ட்ரிக் வேரியண்ட் 1140 ஹெச்.பி. பவர் மற்றும் 1150 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த வேரியண்ட் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர்கள் வேகத்தை 2.5 நொடிகளில் எட்டுவதோடு, அதிகபட்சம் மணிக்கு 260 கிலோமீட்டர்கள் வேகத்தில் செல்லும்.

SCROLL FOR NEXT