இது புதுசு

669கிமீ ரேன்ஜ் வழங்கும் புது பிஎம்டபிள்யூ கார் அறிமுகம் - விலை மற்றும் முழு விவரங்கள்

புதிய பி.எம்.டபிள்யூ. காரில் 81.6kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது.

பி.எம்.டபிள்யூ. இந்தியா நிறுவனம் தனது i5 LWB மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் செடான் மாடலின் விலை ரூ. 79.60 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இது அதன் ICE 5 சீரிஸ் மாடலை விட ரூ. 3 லட்சம் அதிகம் ஆகும். புதிய பி.எம்.டபிள்யூ. மாடலின் விநியோகம் உடனடியாக தொடங்குகிறது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, புதிய i5 LWB மாடலில் ஃபுல் எல்.இ.டி. லைட்டிங், BMW M-ஸ்போர்ட் டூயல்-டோன் அலாய் வீல்கள், ஒளிரும் கிரில், இழுக்கும் வகை கதவு கைப்பிடிகள், 20-இன்ச் டயர்கள், 5 சீரிஸ் பேட்ஜிங் மற்றும் மெல்லிய டெயில் லைட்கள் இடம்பெற்றுள்ளன.

சிறப்பு அம்சங்கள்:

அளவீடுகளில் இந்த கார் 5.18 மீட்டர் நீளம், 2.15 மீட்டர் அகலம் மற்றும் 1.52 மீட்டர் உயரம் கொண்டது, மேலும் இதன் வீல்பேஸ் 3.1 கொண்டுள்ளது. இதன் கேபினில், க்ரிஸ்டலைஸ்டு டிரைவ் செலக்டர் மற்றும் டிரைவ் மோட் டயல்கள், 12.3-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர், 14.9-இன்ச் சென்டர் ஸ்கிரீன், வீகன் லெதர் அப்ஹோல்ஸ்டரி மற்றும் ஒரு பனோரமிக் கிளாஸ் ரூஃப் ஆகியவை உள்ளன.

முன் இருக்கை வென்டிலேட் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் சரவுண்ட் லைட்டிங், 4-ஜோன் ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், போவர்ஸ் & வில்கின்ஸ் ஆடியோ, பி.எம்.டபிள்யூ. ஓ.எஸ். 8.5 மற்றும் டிஜிட்டல் கீ பிளஸ் ஆகியவை இதன் சிறப்பம்சங்களில் அடங்கும். மேலும், முன் இருக்கைகளின் பின்புறத்தில் தொலைபேசி/டேப்லெட் வைக்கும் செட்பேக் வழங்கப்படுகிறது.

இந்த மாடல் கார்பன் பிளாக் மெட்டாலிக் நிறத்தில் டைட்டானியம் பிரான்ஸ் அக்சன்ட்கள் செய்யப்பட்டுள்ளன. சில்வர் பிரான்ஸ் இன்டீரியர் அக்சென்ட்களுடன் 'ஃபர்ஸ்ட் எடிஷன்' என்ற என்கிரேவிங் உள்ளது.

சார்ஜிங் மற்றும் செயல்திறன்:

புதிய பி.எம்.டபிள்யூ. i5 LWB மாடலில் 264 ஹெச்.பி. பவர், 410 நியூட்டன் மீட்டர் டார்க் வெளிப்படுத்தும் RWD என்ஜின் மற்றும் 81.6kWh பேட்டரி பேக் வழங்கப்படுகிறது. இந்த யூனிட் 669 கிலோமீட்டர் வரை செல்லும் என கூறப்படுகிறது. இந்த கார் 6.7 நொடிகளில் 0-100 கிலோமீட்டர் வேகத்தை எட்டுகிறது.

இத்துடன் 1kW (AC) மற்றும் 160kW (DC) சார்ஜிங் வேகங்கள் ஆதரவு வழங்கப்படுகிறது. இதில் DC சார்ஜிங் மூலம் 33 நிமிடங்களில் பேட்டரியை 10 முதல் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

பாதுகாப்பு அம்சங்களில் எட்டு ஏர்பேக்குகள், 360° கேமரா மற்றும் பக்கவாட்டு மோதல் பாதுகாப்பு ஆகியவை அடங்கும். குறிப்பிடத்தக்க வகையில், இந்த ஃபர்ஸ்ட் எடிஷன் மாடல் முதலில் 99 யூனிட்டுகளாக மட்டுமே தயாரிக்கப்பட்டது, அவை அனைத்தும் விற்றுத் தீர்ந்துவிட்டன.

SCROLL FOR NEXT