மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் 2026 மெர்சிடிஸ் மெபேக் எஸ் கிளாஸ் மாடலை அறிமுகப்படுத்தியது. புதிய 2026 மாடலில் டிசைன், தொழில்நுட்பம் மற்றும் பவர்டிரெய்ன் என எல்லாவற்றிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இவை சமீபத்திய மேம்பட்ட எஸ் கிளாஸ் மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
புதிய மாடலின் வெளிப்புறத்தில் பாரம்பரிய மெபேக் அம்சங்கள் தக்கவைக்கப்பட்டுள்ளன. இந்த முறை கிரில் சற்றே பெரியதாகவும், இலுமினேஷன் மற்றும் பாரம்பரிய செங்குத்தான ஸ்லாட்களை கொண்டிருக்கிறது. இத்துடன் மெபேக் பிரான்டிங் இடம்பெற்றுள்ளது. இந்த காரில் லைட்டிங் அம்சங்களும் அப்டேட் செய்யப்பட்டுள்ளன. அதன்படி இந்த காரில் புதிய ஹெட்லேம்ப் சிக்னேச்சர்கள், ரி-டிசைன் செய்யப்பட்ட டெயில் லைட்கள் உள்ளன.
உள்புறத்தை பொருத்தவரை பின்புற இருக்கைகள் அதிக சவுகரிமாக இருப்பதை கவனத்தில் கொண்டு அதற்கான மூலப் பொருட்கள் மாற்றப்பட்டு, புதிய இருக்கை மேற்கவர் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில் லெதர்-இல்லா இருக்கை மேற்கவர் ஆப்ஷனும் அடங்கும். டேஷ்போர்டில் மேம்பட்ட MBUX சூப்பர்-ஸ்கிரீன் மற்றும் மெபேக் சார்ந்த கிராஃபிக்ஸ் மற்றும் தீம்கள் வழங்கப்பட்டுள்ளன.
பவர்டிரெய்னை பொருத்தவரை 2026 மெபேக் எஸ் கிளாஸ் மாடலின் S 580 வேரியண்ட் மேம்பட்ட V8 என்ஜின் பயன்படுத்துகிறது. இந்த யூனிட் 530 ஹெச்.பி. பவர், ஹைப்ரிட் அசிஸ்டன்ஸ் உடன் வருகிறது. இது கூடுதல் செயல்திறன் மற்றும் மேம்பட்ட திறன் கிடைப்பதை உறுதிப்படுத்துகிறது.
சர்வதேச அளவில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் போன்ற பகுதிகளில் மெர்சிடிஸ் மெபேக் S 680 மாடலில் V12 என்ஜின் வழங்கப்படுகிறது. இது 6.0 லிட்டர் யூனிட் உடன் வருகிறது. இது 630 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. இந்தியா உள்பட மற்ற சந்தைகளில் இந்த கார் 4.0 லிட்டர் V8 என்ஜின் உடன் வருகிறது. இது 612 ஹெச்.பி. பவர் வெளிப்படுத்தும்.
இத்துடன் பிளக்-இன் ஹைப்ரிட் வேரியண்ட் வழங்கப்படுகிறது. இந்த கார் எலெக்ட்ரிக்-ஒன்லி மோடில் கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர்கள் வரையிலான ரேஞ்ச் வழங்கும். இந்திய சந்தையில் புதிய மேம்பட்ட மெர்சிடிஸ் மெபேக் எஸ் கிளாஸ் மாடல் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்த காரின் விலை இந்திய மதிப்பில் ரூ. 3 கோடியை விட அதிகமாக நிர்ணயம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.