இந்திய ஆட்டோமொபைல் சந்தையி் விலை உயர்வை அறிவித்த பிராண்டுகளின் பட்டியலில், டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) சமீபத்திய நிறுவனமாக இணைந்துள்ளது. டொயோட்டா நிறுவனம் தற்போது தனது இன்னோவா கிரிஸ்டா மாடலின் விலையை உடனடியாக மாற்றியமைத்துள்ளது.
விலை உயர்வை பொருத்தவரை இன்னோவா கிரிஸ்டாவின் ZX MT 7S மற்றும் ZX MT 7S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியன்ட்களின் விலை ரூ. 33,000 அதிகரித்துள்ளது. அடுத்ததாக, VX MT 7S, VX MT 8S, VX MT 7S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் மற்றும் VX MT 8S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியன்ட்களின் விலை, தற்போதைய விலையை விட ரூ. 31,000 கூடுதலாக இருக்கும்.
டொயோட்டா இன்னோவா கிரிஸ்டாவின் GX+ MT 8S மற்றும் GX+ MT 8S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியன்ட்களின் விலைகள் தலா ரூ. 27,000 உயர்த்தப்பட்டுள்ளன, அதே நேரத்தில் அவற்றின் ஆறு இருக்கைகள் கொண்ட வேரியன்ட்களின் விலைகள் தலா ரூ. 26,000 அதிகரித்துள்ளன.
டொயோட்டாவின் பிரபலமான MPV மாடலான இன்னோவா க்ரிஸ்டா GX MT 7S மற்றும் GX MT 8S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியன்ட்களின் விலை ரூ. 23,000 அதிகரித்துள்ளது. இதேபோல், இந்த மாடலின் GX MT 8S மற்றும் GX MT 8S பிளாட்டினம் ஒயிட் பேர்ல் வேரியன்ட்கள், தற்போதைய விலையை விட ரூ. 22,000 கூடுதலாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த மாற்றத்தின் மூலம், டொயோட்டா இன்னோவா கிரிஸ்டா மாடல்களின் விலை தற்போது ரூ. 19.95 லட்சம் முதல் ரூ. 27.10 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது (அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள்). இன்னோவா கிரிஸ்டா, இந்த ஆண்டு ஜூன் மாதம் MY26 மாடலின் அறிமுகத்துடன் தனது கடைசி அப்டேட் பெற்றது குறிப்பிடத்தக்கது.