கார்

மேம்படுத்தப்பட்ட புதுப்பொலிவுடன் Toyota Hilux..!-இந்தியாவில் இம்மாதம் முதல் விற்பனை

360-டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள், பவர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டொயோட்டா ஹிலக்ஸ் பிக்கப் டிரக்:

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் தனது அடுத்த தலைமுறை டொயோட்டா ஹிலக்ஸ் பிக்கப் டிரக்கை இந்த மாதம் 28 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது.

கடந்த ஆண்டு உலகளவில் அறிமுகமான டொயோட்டா ஹிலக்ஸ் வாகனம் தற்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு புதுப்பொலிவுடன் வர இருக்கிறது.

முன்பக்கத்தில், தற்போதைய பெரிய கிரில்லுக்குப் பதிலாக, பாடி கலரில் தேன்கூடு வடிவ கிரில், மெல்லிய LED ஹெட்லேம்ப்கள், மாற்றியமைக்கப்பட்ட பம்பர் மற்றும் ஒரு ஸ்கிட் பிளேட் ஆகியவை இந்த பிக்கப்பில் இடம்பெற்றுள்ளன.

பின்பக்கத்தில் பிராண்டின் சின்னத்திற்குப் பதிலாக 'டொயோட்டா' என்ற எழுத்துக்கள் இடம்பெறக்கூடும் என கூறப்படுகிறது.

உட்புறத்தைப் பொறுத்தவரை, கேபினில் இரட்டை 12.3-அங்குல டிஸ்ப்ளேக்களுடன் கூடிய புதிய டாஷ்போர்டு அமைப்பு, மறுவடிவமைக்கப்பட்ட ஸ்டீயரிங் வீல் மற்றும் ஃபிசிக்கல் கண்ட்ரோல்களுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட சென்டர் கன்சோல் ஆகியவை இடம்பெறும்.

360-டிகிரி கேமரா, ஆறு ஏர்பேக்குகள், டூயல்-ஸோன் கிளைமேட் கண்ட்ரோல், ADAS, பவர் மற்றும் வென்டிலேட்டட் முன் இருக்கைகள் அடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

என்ஜினை பொறுத்தவரையில் 204 hp மற்றும் 500 nm டார்க்கை வெளிப்படுத்தும், 2.8-லிட்டர். 4-சிலிண்டர் டர்போ டீசல் இன்ஜின் மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியர்பாக்ஸ் தேர்வுகளில் 6-ஸ்பீடு மேனுவல் அல்லது 6-ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆகியவை அடங்கும்.

இது லோ-ரேஞ்ச் டிரான்ஸ்ஃபர் கேஸுடன் கூடிய 4x4 சிஸ்டத்தையும் பெறும். இந்த என்ஜின், தற்போது ஃபார்ச்சூனர் நியோ டிரைவ் வேரியண்ட்டில் வழங்கப்படும் அதே 48V மைல்ட்-ஹைப்ரிட் சிஸ்டத்துடன் இணைக்கப்படவும் வாய்ப்புள்ளது.

விலை:

தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஹிலக்ஸின் விலை ரூ.28.5 லட்சம் முதல் எக்ஸ் ஷோரூமில் தொடங்குகிறது.

இந்நிலையில் மேம்படுத்தப்பட்ட மாடலின் வருகையால், இதன் விலைகள் சுமார் ரூ.1 லட்சம் வரை அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது.