சியாரா EV
கார்

இந்தியாவில் சியாரா EV காரை அறிமுகம் செய்தது டாடா..!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் சியாரா வகை எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. இதன் ஆரம்ப விலை 18.79 லட்சம் ரூபாய் ஆகும்.

டாடா மோட்டார்ஸ் இந்தியாவில் இருந்து இதுவரை 6 வகையிலான எலக்ட்ரிக் காரை அறிமுகம் செய்துள்ளது. தற்போது 7-வது மாடலாக சியாராவை இன்று அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே உள்ள ஷோரூமில் இதன் ஆரம்ப விலை 18.79 லட்சம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 665 கி.மீ. வரை பயணம் செய்ய இயலும்.

டுயல் மோட்டார் ஆல்-வீல் டிரைவ் செட்அப் உடன் இது 2-வது மாடல் சொகுசு கார் ஆகும். வாடிக்காளர்கள் இரண்டு பேட்டரி பேக் ஆப்சனை தேர்வு செய்ய முடியும். அதில் ஒன்று ஒருமுறை சார்ஜ் செய்தால் 665 கி.மீ. வரை பயணம் செய்யக் கூடியதாகும்.

உள்ளே, சியாரா EV ஆனது ICE மாடலில் உள்ள அதே டாஷ்போர்டு அமைப்பைக் கொண்டுள்ளது, இருப்பினும் இது ஒரு வித்தியாசமான உட்புற கலர் Theme-ஐ கொண்டுள்ளது. விசாலமான கேபின் மற்றும் தாராளமான லக்கேஜ் வைக்கும் இடத்தையும் அப்படியே கொண்டுள்ளது.