கார்

டர்போ என்ஜினுடன் அதிக மைலேஜ் வழங்கும் புதிய ரெனால்ட் டிரைபர் அறிமுகம்

இந்த மாடல் விரைவில் CNG மற்றும் CVT வேரியன்ட்களையும் பெறும் என எதிர்பார்க்கலாம்.

ரெனால்ட் இந்தியா நிறுவனம் டிரைபர் மாடலின் பலவீனமான அம்சத்திற்கு இறுதியாக ஒரு தீர்வை காணும் விதமாக, இந்த மாடலுக்கு டர்போ-பெட்ரோல் பவர்டிரெய்னை அறிமுகப்படுத்தியது.

சக்திவாய்ந்த டர்போ பெட்ரோல் என்ஜின் கொண்ட டிரைபர் டர்போ மாடலின் விலை ரூ. 7.84 லட்சம் முதல் தொடங்குகிறது. மேலும், இந்த டிரைபர், புதிய RGEP பிளாட்ஃபார்மிற்கு மாறுகிறது. இருப்பினும், இது முந்தைய காரில் இருந்த அதே உயர்-ரக வடிவமைப்பிலேயே தொடர்ந்து வழங்கப்படுகிறது.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

புதிய ரெனால்ட் டிரைபர் டர்போ மாடலில், 1.0-லிட்டர், மூன்று-சிலிண்டர், TCe டர்போ-பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 99bhp பவர், 180Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இந்த புதிய மாடல், இந்த பிரிவில் மற்ற மாடல்களை விட சிறந்த மைலேஜ்- லிட்டருக்கு அதிகபட்சம் 21 கிலோமீட்டர்கள் வழங்கும் என ரெனால்ட் கூறுகிறது.

புதிய என்ஜின் மட்டுமின்றி, ரெனால்ட் காரின் உள்ளமைப்பிலும் மாற்றங்களைச் செய்துள்ளது. இந்த மாடலில் திருத்தப்பட்ட சஸ்பென்ஷன் டியூனிங், ஆன்டி-ரோல் பார்கள், புதிய தெர்மல் மேனேஜ்மென்ட் சிஸ்டம், புதிய கட்டமைப்பு மேம்பாடுகள், சிறந்த பிரேக்கிங் செயல்திறன் மற்றும் ABS, TCS, VDC கண்ட்ரோல்களுக்கான திருத்தப்பட்ட அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

டர்போசார்ஜ் செய்யப்பட்ட டிரைபர் மாடல்: எவல்யூஷன், டெக்னோ மற்றும் எமோஷன் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த மாடல் விரைவில் CNG மற்றும் CVT வேரியன்ட்களையும் பெறும் என எதிர்பார்க்கலாம்.

SCROLL FOR NEXT