2026 ஆம் ஆண்டு பண்டிகைக் காலத்தில் சந்தையில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக, மூன்றாம் தலைமுறை ஆடி Q3 இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்த 12 மாதங்களுக்கான இந்திய கார் சந்தையில் ஆடி நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ள பெரிய தயாரிப்புகளில் இது முதல் மாடல் ஆகும். இதைத் தொடர்ந்து A5 செடான் மற்றும் Q9 எஸ்.யூ.வி. ஆகியவை அறிமுகம் செய்யப்படும்.
புதிய Q3 காரில் தாழ்வாகப் பொருத்தப்பட்ட ஹெட்லேம்ப்கள், முழுமையான எல்.இ.டி. டி.ஆர்.எல்.-கள் மற்றும் பம்பரில் மாறுபட்ட வண்ண கூறுகள் கொண்ட ஆடியின் சமீபத்திய கிரில் இடம்பெற்றுள்ளது.
பக்கவாட்டில், புதிய Q3 கார் 18-இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பாடி கலரில் அமைந்த கதவு கைப்பிடிகள் மற்றும் ORVM-களுடன் வருகிறது. காரின் பின்புறத்தில் ஒளிரும் ஆடி லோகோ, அதனுடன் கனெக்ட்டெட் எல்.இ.டி. லைட் பார் மற்றும் தனித்தனி எல்.இ.டி. கூறுகளைகொண்ட முற்றிலும் புதிய டெயில் லேம்ப்கள் இடம்பெற்றுள்ளன.
உள்புறம், டாஷ்போர்டில் ஓட்டுநரை நோக்கிய கோணத்தில் அமைக்கப்பட்ட இரட்டை டிஜிட்டல் திரைகள் உள்ளன. அதே நேரத்தில், புதிய ஸ்டீயரிங் வீல், பனோரமிக் சன்ரூஃப், குரோம் பாகங்களை கொண்ட புதிய சென்டர் கன்சோல், பவர் மூலம் இயங்கும் முன் இருக்கைகள், மல்டி-ஜோன் கிளைமேட் கண்ட்ரோல், லெவல் 2 ADAS, ஆட்டோ பார்க் வசதியுடன் கூடிய 360-டிகிரி கேமரா போன்ற புதிய அம்சங்களும் இதில் அடங்கும்.
இரண்டாம் தலைமுறை மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த புதிய Q3 காரின் நீளம் மற்றும் வீல்பேஸ் 100 மிமீ அதிகரித்துள்ளது.
இந்திய சந்தையில் புதிய Q3, 200bhp பவர் மற்றும் 320Nm டார்க் திறனை உற்பத்தி செய்யும் வகையில் ட்யூன் செய்யப்பட்ட 2.0-லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினுடன் கிடைக்கும். இந்த இன்ஜின் 7-ஸ்பீடு டூயல் கிளட்ச் டிரான்ஸ்மிஷன் கியர்பாக்ஸ் உடன் வருகிறது.
இந்திய சந்தையில் இந்த கார் பல வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூ. 46 லட்சம் முதல் ரூ. 52 லட்சம் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஆடி Q3 மாடல் மெர்சிடிஸ்-பென்ஸ் GLA, பி.எம்.டபிள்யூ. 2 சீரிஸ் கிரான் கூப், மினி கண்ட்ரிமேன் மற்றும் பி.எம்.டபிள்யூ. X1 LWB ஆகியவை மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.
அதன் நிலையை கருத்தில் கொண்டு, இது ஃபோக்ஸ்வேகன் டெய்ரான் , ஸ்கோடா கோடியாக் , டொயோட்டா ஃபார்ச்சூனர் , எம்ஜி மஜெஸ்டர் போன்ற கார்களுடனும், ஹோண்டா மற்றும் ஹூண்டாயின் எதிர்கால மாடல்களுடனும் போட்டியிடும்.