MINI Countryman C  MINI Countryman C
கார்

மேட் இன் இந்தியா Countryman C சொகுசு காரை அறிமுகப்படுத்திய MINI: விலை எவ்வளவு தெரியுமா?

பி.எம்.டபிள்யூ. நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சொகுசு காரை MINI நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

இங்கிலாந்தின் முன்னணி கார் நிறுவனம் மினி (MINI). இந்த நிறுவனம் தனது தயாரிப்புகளை பி.எம்.டபிள்யூ. நிறுவனம் மூலம் உலக நாடுகளில் சந்தைப்படுத்தி வருகிறது. பி.எம்.டபிள்யூ. ஜெர்மனியை சேர்ந்த பிரபல கார் நிறுவனம் ஆகும். இது விலையுயர்ந்த சொகுசு கார்களை தயாரித்து வருகிறது.

சென்னையில் பி.எம்.டபிள்யூ. குழுமத்திற்கான கார் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இந்த நிறுவனத்தில் MINI நிறுவனம் Countryman C என்ற சொகுசு வாகனத்தை தயாரிக்க முடிவு செய்தது. அதன்படி Countryman C கார்கள் தயாரிக்கப்பட்டு இன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் தயாரிக்கப்படும் கார்களுக்கு இணையான தரம் இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது என்று MINI நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே உள்ள ஷோரூம்களில் இந்த கார்களை 47.50 லட்சம் ரூபாய்க்கு வாங்கிக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த மாடல் கார் ஐந்து கலர்களில் கிடைக்கும். MINI Twin Power டூர்போ டென்னாலாஜியோடு 1.5லி பெட்ரோல் என்ஜின் கொண்டது. மணிக்கு 156 கி.மீ. வேகம் வரை செல்லக் கூடியவை. 7-speed Double Clutch Steptronic Sport transmission உடன் இணைக்கப்பட்டுள்ளது.

உள்பக்கம் மினி ஆப்பரேட்டிங் சிஸ்டம் 9-இல் இயங்கும் 240மிமீ வட்ட வடிவ OLED தொடுதிரையை மையமாகக் கொண்ட ஒரு மினிமலிஸ்ட் கேபினுடன், மினி கவர்ச்சிகரமான எளிமை என்ற பாணிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.