கார்

மெர்சிடிஸ் பென்ஸின் E53 மாடல் இந்தியாவில் அறிமுகம் - 3.8 வினாடிகளில் 100 கி.மீ. வேகத்தை எட்டும்

E 53 மாடலில் AMG-க்கென பிரத்யேகமான பல வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

மெர்சிடிஸ்-பென்ஸ் AMG E53 HYBRID 4MATIC+:

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் தனது புதிய AMG E53 HYBRID 4MATIC+ காரை ஜூலை 23 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்த செயல்திறன் மிக்க செடான் வகை மாடல், மூன்று லிட்டர் மற்றும் ஆறு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை ஒரு எலக்ட்ரிக் மோட்டாருடன் இணைக்கும் பிளக்-இன் ஹைப்ரிட் பவர்டிரெய்னுடன் இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

இந்த மெர்சிடிஸ் AMG-யில் பிளக்-இன் ஹைப்ரிட் அமைப்பு 21.2kWh பேட்டரியைப் பயன்படுத்துகிறது.

அதன்மூலம் 100 கி.மீ. வேகத்தை வெறும் 3.8 வினாடிகளில் எட்டி, மணிக்கு 280 கி.மீ என்ற அதிகபட்ச வேகத்தை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

E 53 மாடலில் AMG-க்கென பிரத்யேகமான பல வடிவமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஒளிரும் AMG கிரில், பெரிய முன்பக்க ஏர் இன்டேக்குகள் விரிந்த முன்பக்க வீல் ஆர்ச்சுகள் மற்றும் டக்டெயில் ஸ்பாய்லர் ஆகியவை மேம்படுத்தப்பட்டுள்ளன.

பின்பக்கத்தில், ஒரு டிஃப்யூசர் மற்றும் வட்ட வடிவ நான்கு எக்ஸாஸ்ட்கள் பொருத்தப்பட்டுள்ளன.

அதன் கூடுதல் ஆற்றலைக் காட்டுவதற்காக, AMG டைனமிக் பிளஸ் பேக்கேஜ், அதன் வலிமையான பிரேக்குகளுக்கான சிவப்பு காலிப்பர்கள் மற்றும் மைக்ரோஃபைபரால் சுற்றப்பட்ட ஸ்டீயரிங் வீல் உள்ளிட்ட பல்வேறு செயல்திறன் சார்ந்த அம்சங்களைச் சேர்க்கிறது.

உட்புற டாஷ்போர்டில் 12.3-அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் டிஸ்ப்ளே மற்றும் 14.4-அங்குல சென்ட்ரல் டச்ஸ்கிரீன் ஆகியவை உள்ளன.

விலை

மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம், E 53 ஹைப்ரிட் 4MATIC+ மாடலுக்கான விலைகளை ஜூலை 23 அன்று அறிவிக்க உள்ளது.

அதன் ஆரம்ப விலை ரூ. 1.40 கோடியில் இருந்து 1.45 கோடி வரையில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.