மாருதி சுசுகி நிறுவனம் இந்திய சந்தையில் தனது பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலை அறிமுகம் செய்தது. புதிய மாருதி சுசுகி பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலின் விலை ரூ. 6.10 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) முதல் தொடங்குகிறது.
புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் ஸ்டைலிங் மாற்றப்பட்டு, கூடுதலாக புதிய அம்சங்கள் மற்றும் புதிய பெட்ரோல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.
அந்த வகையில், புதிய பலேனோ ஃபேஸ்லிஃப்ட் மாடலில் 1.2 லிட்டர் 3 சிலிண்ர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இதே யூனிட் ஸ்விஃப்ட் மற்றும் டிசையர் மாடல்களிலும் வழங்கப்பட்டு இருக்கிறது.
இத்துடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் AMT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதே என்ஜின் ஃபேக்டரி-ஃபிட் சி.என்.ஜி. கிட் உடனும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், பலேனோ மாடலில் முதல் முறையாக சி.என்.ஜி. கிட் வழங்கப்படுகிறது. மேலும், AMT கியர்பாக்ஸ் கொண்ட மாடலிலும் சி.என்.ஜி. ஃபிட் செய்யப்படும் என மாருதி சுசுகி தெரிவித்துள்ளது.
மாற்றங்களை பொருத்தவரை புதிய பலேனோ மாடலில் சற்றே அளவில் பெரிய முன்புற கிரில், கருப்பு நிற ஸ்லாட்களால் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. இதன் ஹெட்லேம்ப் மற்றும் டெயில் லேம்ப்களில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.
இதன் பம்ப்பர்களில் சிறு மாற்றம் செய்யப்பட்டு புதிதாக ஃபாக் லேம்ப் ஹவுசிங் வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் 16-இன்ச் அலாய் வீல்களில் புது டிசைன் வழங்கப்பட்டு இருக்கிறது.
உள்புறத்தில் கிட்டத்தட்ட ஒரே மாதிரி காட்சியளிக்கும் வகையில் 9-இன்ச் டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், செமி-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் முன்புறம் வென்டிலேட்டெட் இருக்கைகள், டயர் பிரெஷர் மானிட்டர், லெவல் 2 ADAS வழங்கப்பட்டு இருக்கிறது.
இவைதவிர ஏற்கனவே உள்ள மாடலில் இருந்து உயரத்தை அட்ஜஸ்ட் செய்யும் ஓட்டுநர் இருக்கை, வயர்லெஸ் சார்ஜர், ஹெட்-அப் டிஸ்ப்ளே, ஆட்டோமேடிக் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா வழங்கப்படுகிறது.
இந்திய சந்தையில் புதிய பலேனோ மாடல் டாடா அல்ட்ரோஸ் மற்றும் ஹூண்டாய் i20 ஆகிய மாடல்களுக்கு பிரீமியம் ஹேட்ச்பேக் பிரிவில் போட்டியாக அமைகிறது.