கார்

Maruti Brezza | பட்ஜெட் விலையில், 20.17 kmpl மைலேஜ் உடன் மேம்படுத்தப்பட்ட டிசைனில் வடிவமைப்பு

புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங், புதிய தொழில்நுட்பம், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஒரு புதிய இன்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி இந்தியா நிறுவனம் தனது மேம்படுத்தப்பட்ட பிரெஸ்ஸா மாடலை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த மாடல் புதுப்பிக்கப்பட்ட ஸ்டைலிங், புதிய தொழில்நுட்பம், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் ஒரு புதிய என்ஜின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட எஸ்யூவி பிரெஸ்ஸாவில், அடர் குரோமுடன் கூடிய முன்பக்க கிரில், ஒரு புதிய முன்பக்க பம்பர், மேம்படுத்தப்பட்ட ஃபாக் லேம்ப் அம்சங்கள் மற்றும் புதிதாக வடிவமைக்கப்பட்ட அலாய் வீல்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மாருதி சுசுகி பிரெஸ்ஸா வடிவமைப்பு:

பெரிய 10.1-அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தை மையமாகக் கொண்டு டாஷ்போர்டு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைப்பு வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளேவை அம்சங்களுடன், ஆர்காமிஸ் பிரீமியம் ஆடியோ சிஸ்டத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

உயர்-ஸ்பெக் ZXi+ வேரியன்ட்களில் ஆர்காமிஸ் சரவுண்ட் சென்ஸ், உள்ளமைக்கப்பட்ட அலெக்ஸாவுடன் கூடிய சுஸுகியின் நெக்ஸ்ட் ஜென் கனெக்ட் டெலிமேட்டிக்ஸ் சூட், ஓவர்-தி-ஏர் மென்பொருள் அப்டேட்கள் மற்றும் "ஹாய் சுஸுகி" என்ற வேக் ஃபிரேஸ் மூலம் செயல்படுத்தப்படும் வாய்ஸ் கமாண்டுகளும் கூடுதலாக இடம்பெற்றுள்ளன.

ZXi மற்றும் ZXI+ வேரியன்ட்களில் உள்ள இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் TFT கலர் டிஸ்ப்ளேவுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பிரெஸ்ஸாவில் ஆக்டிவ் கூலிங்குடன் கூடிய வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், PM2.5 டிஸ்ப்ளே கொண்ட ஏர் பியூரிஃபையர், எலெக்ட்ரிக் சன்ரூஃப், டாப் வேரியண்ட்டில் 64 வண்ண ஆம்பியன்ட் லைட்டிங், எலெக்ட்ரிக் சன்ரூஃப் மற்றும் 360 டிகிரி கேமரா ஆகியவை இடம்பெற்றுள்ளன.

இந்த எஸ்யூவியில் லேன் சேஞ்ச் அசிஸ்டுடன் கூடிய பிளைண்ட் ஸ்பாட் வார்னிங், ரியர் கிராஸ்-டிராஃபிக் அலர்ட், சேஃப் எக்ஸிட் வார்னிங், முன்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம் போன்ற அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

மேலும் இந்த வாகனத்தில் ஆறு ஏர்பேக்குகள், ஹில் ஹோல்ட் அசிஸ்டுடன் கூடிய எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம், ஐசோஃபிக்ஸ் குழந்தை இருக்கை மவுண்ட்கள், ஃபோர்ஸ் லிமிட்டர்களுடன் கூடிய முன்பக்க சீட் பெல்ட் ப்ரீ-டென்ஷனர்கள் மற்றும் இன்ஃபோகிராஃபிக் டிஸ்ப்ளேவுடன் கூடிய ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் ஆகியவை அடங்கும்.

என்ஜின்:

இந்த எஸ்யூவியில் 1.0-லிட்டர் பூஸ்டர்ஜெட் டர்போ-பெட்ரோல் இன்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 110 hp மற்றும் 170 Nm ஆற்றலை உற்பத்தி செய்கிறது.

பிரெஸ்ஸாவில், ஸ்மார்ட் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.5-லிட்டர் NA பெட்ரோல் இன்ஜின் (103 hp. 140 Nm) தொடர்ந்து வழங்கப்படுகிறது.

இது 6-ஸ்பீடு மேனுவல் அல்லது பேடில் ஷிஃப்டர்களுடன் கூடிய 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸுடன் கிடைக்கிறது.

மைலேஜ்:

இதில் ஆட்டோமேட்டிக் மாடல் 20.17 kmpl எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதாகக் கூறப்படுகிறது. CNG ஆப்ஷனை விரும்பும் வாடிக்கையாளர்கள், ஃபேக்டரியில் பொருத்தப்பட்ட S-CNG மாடலைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதன் அண்டர்பாடி சிலிண்டர் அமைப்பின் காரணமாக இது பயன்படுத்தக்கூடிய பூட் ஸ்பேஸைத் தக்கவைத்துக்கொள்வதோடு, 26.90 km/kg எரிபொருள் சிக்கனத்தையும் வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாருதி சுசுகி தனது வாடிக்கையாளர்களுக்கு மூன்று ஆண்டுகள் அல்லது 1,00,000 கிமீ நிலையான உத்தரவாதத்தை வழங்குகிறது. இதை ஆறு ஆண்டுகள் வரை பயனர்கள் நீட்டித்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.

விலை:

இந்த ஆண்டு வெளியாகியுள்ள மேம்படுத்தப்பட்ட மாருதி சுசுகி பிரெஸ்ஸா, ரூ.7.40 லட்சம் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.