கார்

மஹிந்திரா பொலிரோ போல்ட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

பொலிரோ மாடலில் 75bhp பவர் மற்றும் 210Nm டார்க் உருவாக்கும் 1.5-லிட்டர், 3-சிலிண்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது.

மஹிந்திரா பொலிரோ அனைவரையும் வசீகரிக்கும் கவர்ச்சிகர எஸ்.யூ.வி.யாக இருந்ததில்லை, ஆனால் புதிய போல்ட் எடிஷன் அதற்கு ஒரு புதிய வண்ணத்தை கொடுக்கிறது.

இந்த எடிஷன், வெண்கல நிற தீமை மையமாக கொண்டு வடிவமைக்கப்பட்ட ஒரு ஸ்டைலிங் வெர்ஷன் ஆகும். தோற்றம் தவிர இந்த மாடலில் இயந்திரவியல் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.

என்னென்ன மாற்றங்கள்:

வெளிப்புறத்தில், முன்பக்க பம்பர், கிரில் மற்றும் ஃபாக் லேம்ப் சரவுண்ட்களில் வெண்கல நிற அக்சென்ட்கள் காணப்படுகின்றன. இதே ஃபினிஷ் அலாய் வீல்கள், ORVM கேப்கள் மற்றும் ரூஃப் ரெயில்களிலும் தொடர்கிறது. அதே சமயம் போல்ட் எடிஷனில் கதவுகளின் ஓரமாக கூடுதல் கிளாடிங்கும் உள்ளது.

பக்கவாட்டில் இருந்து பார்க்கும்போது, ​​இந்த வெண்கல நிற அலாய் வீல்களும் கிளாடிங்கும் அதிகம் கவனிக்கும் மாற்றங்களாக இருக்கும்.

உள்புறத்தில், வெளிப்புற தோற்றத்துடன் பொருந்தும் வகையில், வெண்கல நிற அக்சென்ட்களுடன் கூடிய பிளாக் லெதரெட் இருக்கைகள் கேபினில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் உள்ள ஒரே பயனுள்ள கூடுதல் அம்சம், ரியர்-வியூ கேமரா ஆகும்.

ஆக்சஸரீஸ் தொகுப்பு:

போல்ட் எடிஷன் ஒரு பிரத்யேக ஆக்சஸரீஸ் தொகுப்பின் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் இதில் சேர்க்கப்படும் பாகங்கள் ஒரு புதிய ஃபேக்டரி டிரிம் ஆக இல்லாமல், ஆக்சஸரீஸ்களாகவே வருகின்றன என்றும் மஹிந்திரா கூறுகிறது.

ஸ்டாண்டர்ட் பொலிரோவின் B4, B6, B6(O) மற்றும் B8 வேரியன்ட்களின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 8.57 லட்சம் முதல் ரூ. 9.99 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டும் மஹிந்திரா பொலிரோவின் போல்ட் எடிஷனை வழங்கியிருந்தது.

பவர்டிரெய்ன் முன்பை போலவே உள்ளது. பொலிரோ மாடலில் 75bhp பவர் மற்றும் 210Nm டார்க் உருவாக்கும் 1.5-லிட்டர், 3-சிலிண்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்படுகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே இணைக்கப்படுகிறது.

SCROLL FOR NEXT