ஜீப் இந்தியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது காம்பஸ் கார் மாடலின் பேஸ் வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனை சேர்த்துள்ளது . புதிய ஸ்போர்ட் டிரிம்-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 21.99 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் டீசல் என்ஜினுடன் நீங்கள் வாங்கக்கூடிய மிகவும் எளிதில் அணுகக்கூடிய வேரியண்ட்டாக இது விளங்குகிறது. இந்த வேரியன்ட் டெலிவரி நவம்பர் இரண்டாம் வாரத்தில் ஜீப் டீலர்ஷிப்களில் தொடங்குகின்றன.
ஸ்போர்ட் மாடல் இந்த வரிசையின் என்ட்ரி லெவல் மாடலாக இருப்பதால், டாப் என்ட் மாடல்களை காட்டிலும் இதில் அம்சங்கள் எளிமையாக உள்ளன. இருப்பினும், இதில் ஆறு ஏர்பேக்குகள், ஆட்டோ-ஹோல்ட் செயல்பாடு மற்றும் க்ரூயிஸ் கண்ட்ரோல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இத்துடன் 8.4-இன்ச் அளவிலான யூ கனெக்ட் டச்-ஸ்கிரீன், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே ஆகியவற்றை வழங்குகிறது. ஸ்டீயரிங்கில் பொருத்தப்பட்ட கண்ட்ரோல்கள் மற்றும் மின்சாரத்தால் சரிசெய்யக்கூடிய ORVM-களும் வழங்கப்படுகின்றன. ஜீப் நிறுவனம் இந்த மாடலில் ஃப்ரீக்வென்சி செலக்டிவ் டாம்பிங் (FSD) சஸ்பென்ஷன் மற்றும் டைனமிக் ஸ்டீயரிங் டார்க் (DST) ஆகியவற்றையும் வழங்குகிறது.
ஜீப் காம்பஸ் புது வேரியன்ட் வாங்குபவர்கள் ரூ. 29,900 விலையுள்ள அக்சஸரீ பேக்கேஜையும் தேர்ந்தெடுக்கலாம். இதில் சரவுண்ட் லைட்கள், டாஷ்கேம், ஸ்வூஷ் ஸ்டிக்கர், அனைத்துப் பருவநிலைகளுக்கும் ஏற்ற தரை விரிப்புகள் மற்றும் mud flap-கள் ஆகியவை அடங்கும்.
சமீப மாதங்களில் காம்பஸ் மாடலுக்கு இது இரண்டாவது அப்டேட் ஆகும். ஆகஸ்ட் மாதம், ஜீப் நிறுவனம் 85-ஆவது ஆண்டுவிழா எடிஷனை அறிமுகப்படுத்தியது. இது 85 யூனிட்டுகளுக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டு, சில வெளிப்புற மேம்பாடுகள் மற்றும் கருப்பு நிற உட்புற வடிவமைப்புடன் வந்தது.
விரிவான காம்பஸ் மாடல் வரிசையில், 2WD மற்றும் 4WD தேர்வுகளுடன், மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்களும் தொடர்ந்து வழங்கப்படுகின்றன.
காம்பஸ் ஸ்போர்ட் அதே 2.0-லிட்டர் டர்போ-டீசல் என்ஜினை பயன்படுத்துகிறது. இது 168bhp பவர் மற்றும் 350Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இத்துடன் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.