கார்

ஜனவரி 2027 முதல் விலை உயர்வு: ஆடி இந்தியாவின் அதிர்ச்சி அறிவிப்பு

நீண்டகால நிலைத்தன்மையை பேணுவதற்கு இந்த சரிசெய்தல் அவசியம் என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

2027 ஜனவரியில் விலை உயர்வை அறிவித்த முதல் வாகன பிராண்ட் என்ற பெருமையை ஆடி இந்தியா பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களில் மாருதி தனது நான்காவது விலை உயர்வை அறிவித்த சிறிது காலத்திலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜெர்மன் நாட்டு கார் தயாரிப்பு நிறுவனத்தின்படி, அதிகரித்து வரும் செலவுகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த விலை உயர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இருப்பினும் அந்நிறுவனம் இந்த நடவடிக்கையை முடிந்தவரை அளவானதாகவே வைத்துள்ளதாக கூறப்படுகிறது. வணிகத்தின் நீண்டகால நிலைத்தன்மையை பேணுவதற்கு இந்த சரிசெய்தல் அவசியம் என்றும் அந்நிறுவனம் மேலும் கூறியுள்ளது.

2 சதவீத உயர்வு:

2027 ஜனவரி 1 முதல் விற்கப்படும் அனைத்து ஆடி கார்களின் விலையிலும் இரண்டு சதவீதம் வரை உயர்வு இருக்கும். இதன் துல்லியமான விவரங்கள் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகும்.

இந்த பிராண்ட் தற்போது Q3 , A4 , A6, Q7, Q8, Q5 , S5 ஸ்போர்ட்பேக், RS5, RS Q8 பெர்ஃபார்மன்ஸ், இ-ட்ரான், இ-ட்ரான் GT, SQ8, இ-ட்ரான் ஸ்போர்ட்பேக், Q8 இ-ட்ரான் மற்றும் Q8 ஸ்போர்ட்பேக் இ-ட்ரான் உள்ளிட்ட மாடல்களை விற்பனை செய்கிறது.

SCROLL FOR NEXT