பைக்

Yamaha FZ Blue Flex | இந்தியாவில் அறிமுகமான பைக்கின் விலை மற்றும் முக்கிய அம்சங்களின் முழு விவரம்

பயனர்களின் அன்றாடப் பயன்பாட்டைப் பாதிக்காமல், பல்வேறு எத்தனால் கலவைகளில் இயங்கும் வகையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யமஹா FZ ப்ளூ ஃப்ளெக்ஸ்:

யமஹா மோட்டார் நிறுவனம், தனது FZ ப்ளூ ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த வகை மோட்டார்சைக்கிள், E20 முதல் E85 வரையிலான எத்தனால் கலந்த எரிபொருட்களில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

யமஹாவின் பிரபலமான FZ மாடலை அடிப்படையாகக் கொண்ட FZ ப்ளூ ஃபிளெக்ஸ், அதிக எத்தனால் கலவைகளைத் தாங்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட 149 சி.சி. ஏர்-கூல்டு, ஃப்யூல்-இன்ஜெக்டட் சிங்கிள்-சிலிண்டர் இன்ஜினை கொண்டுள்ளது.

இந்த இன்ஜின் 11.3 bhp சக்தியையும். 12.8 Nm உச்சபட்ச டார்க்கையும் உற்பத்தி செய்கிறது, மேலும் இது 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

பயனர்களின் அன்றாடப் பயன்பாட்டைப் பாதிக்காமல், பல்வேறு எத்தனால் கலவைகளில் இயங்கும் வகையில் இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக யமஹா கூறுகிறது.

வடிவமைப்பைப் பொறுத்தவரை, FZ ப்ளூ ஃப்ளெக்ஸ், FZ வரிசையின் பரிச்சயமான ஸ்டைலிங்கை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

இதில் ஒருங்கிணைந்த பொசிஷன் லேம்ப்களுடன் கூடிய முழு-LED ப்ரொஜெக்டர் ஹெட்லைட், கச்சிதமான எக்ஸாஸ்ட், கூர்மையான LED டெயில் லேம்ப் மற்றும் ஒற்றை இருக்கை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த மோட்டார்சைக்கிள் மெட்டாலிக் பிளாக் வண்ணத்தில் கிடைக்கிறது.

இந்த பைக்கில் எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் உள்ளது. இருப்பினும் இதில் புளூடூத் இணைப்பு, நேவிகேஷன் மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோல் போன்ற அம்சங்கள் வழங்கப்படவில்லை.

யமஹா FZ ப்ளூ ஃப்ளெக்ஸ், தமிழ்நாடு, டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தெலங்கானா முழுவதும் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட ப்ளூ ஸ்கொயர் டீலர்ஷிப்கள் மூலம் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

யமஹா ப்ளூ ஃப்ளெக்ஸ் விலை:

இந்த வகை மாடல் பைக்குகள் எக்ஸ்-ஷோரூமில் ரூ.1,24,240 என்ற அறிமுக விலையில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.