பைக்

VIDA | லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்திய விடா

ஸ்கூட்டருடன் விடா நிறுவனம் லிமிட்டெட் எடிஷன் கே.கே.ஆர். ஹெல்மெட் ஒன்றையும் அறிமுகமானது.

மாலை மலர்

விடா நிறுவனம் VX2 பிளஸ் கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டரை அறிமுகம் செய்தது. இந்த ஸ்கூட்டர் விரைவில் விற்பனைக்கு வருகிறது. நைட்ஸ் அன்பிளக்டு 3.0 நிகழ்ச்சியில் வைத்து இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலில் கொல்கத்தா அணியின் நைட் பர்ப்பிள் மற்றும் கோல்டு நிறங்களை கொண்டிருக்கிறது.

புதிய VX2 பிளஸ் கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் மாடலில் பியர்ல் பிளாக் பாடி பேஸ் மற்றும் கோல்டன் ஹால்ஃப்-டோன் கிரேடியன்ட் மற்றும் பேனல்களில் மைக்ரோ-டாட் பேட்டர்ன்களை கொண்டிருக்கிறது. இத்துடன் கொல்கத்தா அணி மூன்று முறை கோப்பை வென்றதை குறிக்கும் வகையில் மூன்று அக்சென்ட்களை கொண்டுள்ளது.

புதிய VX2 பிளஸ் கே.கே.ஆர். லிமிட்டெட் எடிஷன் மாடல் தேர்வு செய்யப்பட்ட விடா விற்பனை மையங்களில் கிடைக்கும். லிமிட்டெட் எடிஷன் ஸ்கூட்டருடன் விடா நிறுவனம் லிமிட்டெட் எடிஷன் கே.கே.ஆர். ஹெல்மெட் ஒன்றையும் அறிமுகப்படுத்தி உள்ளது.