பைக்

ஜூப்பிட்டர் ஸ்பெஷல் எடிஷன் உற்பத்தியை நிறுத்திய டிவிஎஸ்

அம்சங்களை பொறுத்தவரை, இந்த வேரியன்ட் ஜூபிடர் டிஸ்க் SXC வேரியன்ட்டை போலவே இருந்தது.

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் ஜூபிடர் 110 ஸ்பெஷல் எடிஷன் மாடல்களின் உற்பத்தியை நிறுத்திவிட்டது. மேலும் தற்போது டூயல்-டோன் மாடல் டாப் என்ட் வெர்ஷனாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிஷன் மாடல் கடந்த செப்டம்பர் 2025-இல் ரூ. 93,031 (எக்ஸ்-ஷோரூம்) விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இது ஸ்டார்டஸ்ட் பிளாக் வண்ணத்தில் வந்தது, மேலும் மெட்டாலிக் பேட்ஜிங்கிற்கு வெண்கல நிறம் பயன்படுத்தப்பட்டது. அந்த நிறம் மிகவும் அடக்கமாக இருந்து, ஸ்கூட்டருக்கு ஒரு நேர்த்தியான தோற்றத்தை கொடுத்தது. அம்சங்களை பொறுத்தவரை, இந்த வேரியன்ட் ஜூபிடர் டிஸ்க் SXC வேரியன்ட்டை போலவே இருந்தது.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட டூயல்-டோன் எடிஷன் , இப்போது டிஸ்க் SXC வேரியன்ட்டிற்கு மேலாக டாப்-ஆஃப்-லைன் ஆப்ஷனாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் தற்போதைய விலை ரூ. 90,525 (எக்ஸ்-ஷோரூம்). இது மிகவும் பிரீமியம் தோற்றமளிக்கும் டூயல்-டோன் ஸ்பெக்ட்ரல் ஃபினிஷ் கொண்டுள்ளது.

ஸ்கூட்டரின் இயந்திர அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இதில் தொடர்ந்து 7.91bhp பவர் மற்றும் 9.80Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்ட 113.3cc, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது.

விலை விவரங்கள்:

ஜூப்பிடர் 110 டிரம் ரூ. 74,700

ஜூப்பிடர் 110 டிரம் SXC ரூ. 79,725

ஜூப்பிடர் 110 டிரம் SXC ரூ. 84,925

ஜூப்பிடர் 110 டிஸ்க் SXC ரூ. 87,525

ஜூப்பிடர் 110 டூயல் டோன் ரூ. 90,525

அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT