இந்தியாவில் பிரபலமான பிரீமியம் மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான Triumph, தனது புதிய 350cc பைக் வரிசையை ஏப்ரல் 8, 2026 அன்று அறிமுகப்படுத்த உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த 350cc வரிசையில் Speed 350, Scrambler 350 X, Speed T4 350 மாடல்கள் இடம்பெற உள்ளது இந்த மாடல்கள், தற்போதுள்ள 400cc பைக்குகளின் வடிவமைப்பை (design) பெரும்பாலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஜின் மற்றும் செயல்திறன்:
தற்போது உள்ள 398cc இன்ஜினை அடிப்படையாகக் கொண்டு, அதை 350cc இன்ஜின் வடிவமைக்கப்ட்டுள்ளது. இந்த என்ஜின் சுமார் 35–40 bhp சக்தி வழங்கும். இந்திய சாலைகளுக்கு ஏற்ற low & mid-range torque அதிகமாக இருக்கும்
விலை:
400cc பைக்குகளுக்கு 40% GST வரி விதிக்கப்பட்டதால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 18% வரிக்கு உட்பட்டு 400ccல் இருந்து 350cc ஆகக் குறைத்து இந்த பைக்குகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆதலால் இந்த பைக்குகள் விலை ரூ.2.2 லட்சத்தில் இருந்து தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய 350cc Triumph பைக்குகள், இந்தியாவில் ஏற்கனவே பிரபலமான Royal Enfield Classic 350, Hunter 350 போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக இருக்கும் என்று கூறப்படுகிறது.