பைக்

இரு புதிய நிறங்களில் கிடைக்கும் சுசுகி அக்சஸ் 125

சுசுகி அக்சஸ் 125: இரண்டு புதிய வண்ணங்களில் ஸ்டைலிஷ் தோற்றம்

சுசுகி நிறுவனம் இந்தியாவில் அக்சஸ் 125 மாடலில் மெட்டாலிக் ராயல் பிரான்ஸ் மற்றும் மெட்டாலிக் மேட் போர்டோ ரெட் என இரண்டு புதிய வண்ணங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வண்ணங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட அக்சஸ் 125 மாடல்களுக்கு கிடைக்கின்றன.

மெட்டாலிக் ராயல் பிரான்ஸ் நிறமானது ரைடு கனெக்ட் எடிஷன் மற்றும் ரைடு கனெக்ட் ஏபிஎஸ் எடிஷன் ஆகியவற்றில் கிடைக்கிறது. இந்த நிறத்தில், ஏப்ரான் மற்றும் பாடி பேனல்களில் முழுமையான பிரான்ஸ் ஃபினிஷ் மற்றும் பிரவுன் நிற இருக்கை இடம்பெற்றுள்ளன.

மெட்டாலிக் மேட் போர்டோ ரெட் நிறமானது, டாப் எண்ட் ரைடு கனெக்ட் TFT ABS எடிஷனில் மட்டுமே கிடைக்கிறது. இந்த நிறத்தில், ஏப்ரான் மற்றும் பாடி பேனல்கள் முழுவதும் டார்க் ரெட் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. ஏப்ரான் உட்புறமும் இருக்கையும், மெட்டாலிக் ராயல் பிரான்ஸ் போன்ற டார்க் பிரவுன் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன.

புதிய வண்ணங்கள் சேர்க்கப்பட்டிருப்பதை தவிர, ஸ்கூட்டரின் இயந்திர அமைப்பில் எந்த மாற்றமும் இல்லை. இது தொடர்ந்து அதே 125சிசி, ஏர் கூல்டு, சிங்கில் சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த யூனிட் 8.3 bhp பவர் மற்றும் 10.2 Nm டார்க் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது.

SCROLL FOR NEXT