சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை இந்திய சந்தையில் ரூ. 1,09,999 (எக்ஸ்-ஷோரூம்) என தொடங்குகிறது. இது அந்த பிராண்டின் முதல் குடும்ப பயன்பாட்டிற்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும்.
புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஸ்கூட்டர் மொத்தம் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விநியோகம் வருகிற செப்டம்பர் 25-ஆம் தேதி முதல் தொடங்கும்.
இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பாக்ஸி டிசைன் கொண்டுள்ளது, மேலும் மற்ற சிம்பிள் ஸ்கூட்டர்களில் நாம் வழக்கமாக பார்த்த கூர்மையான மற்றும் ஸ்போர்ட்டியான வடிவமைப்புகளில் இருந்து இது மாறுபட்டுள்ளது. இது ஒரு குடும்ப பயன்பாட்டிற்கான ஸ்கூட்டர் என்பதால், இதில் 920 மிமீ அளவுள்ள பெரிய இருக்கை மற்றும் விசாலமான கால் வைக்கும் பலகை போன்ற சில நடைமுறை அம்சங்கள் உள்ளன.
இருக்கைக்குக் கீழ் உள்ள ஸ்டோரேஜ் பகுதி 70 லிட்டர் கொள்ளளவு கொண்டது, மேலும் பொருட்களை சேமிப்பதற்காக வாகனத்தின் வெளிப்புற பேனல்களிலும் இரண்டு அறைகள் உள்ளன. கையுறைகள் மற்றும் பிற பொருட்களை சேமிப்பதற்காக, ஏப்ரன் பகுதியில் ஒரு சிறிய மறைவான இடமும் உள்ளது.
புதிய சிம்பிள் வேவ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 6.4kW மோட்டாரால் இயக்கப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்ச வேகம் மணிக்கு 90 கிலோமீட்டர் வரை இருக்கும் எனக் கூறப்படுகிறது. வேவ் மற்றும் வேவ் பிளஸ் வேரியண்ட்களில் இந்த மோட்டார் 0-40 கிலோமீட்டர் வேகத்தை 3.3 வினாடிகளில் எட்டுகிற.
இந்து ஸ்கூட்டரின் எஸ் வேரியண்ட்டில் இதற்கு 4 வினாடிகள் ஆகிறது. இது மாறுபட்ட பேட்டரி திறன்களுடன் மூன்று வேரியண்ட்களில் கிடைக்கும்.
சிம்பிள் வேவ் S EBN மற்றும் S TFT வேரியண்ட் 2.2 கிலோவாட் ஹவர் மற்றும் 2.7 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷன்களில் வருகிறது. இவை முறையே 110 கிலோமீட்டர் மற்றும் 132 கிலோமீட்டர் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது.
சிம்பிள் வேவ் EBN மற்றும் TFT வேரியண்ட் 3.7 கிலோவாட் ஹவர் பேட்டரி ஆப்ஷனில் வருகிறது. இவை அதிகபட்சம் 171 கிலோமீட்டர் . இவற்றுடன் வேவ் பிளஸ் மாடல் 5 கிலோவாட் ஹர் பேட்டரி ஆப்ஷனில் கிடைக்கிறது. இந்த வேரியண்ட் அதிகபட்சம் 243 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.