பைக்

எலெக்ட்ரிக் பைக் அறிமுகம் செய்யும் ராயல் என்பீல்டு.. விரைவில் வெளியீடு..!

காப்புரிமை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தன. எலெக்ட்ரிக் பைக் அதிநவீன ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்டிருக்கும்.

ராயல் என்பீல்டு நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் சந்தையில் களமிறங்குகிறது. அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் வருகிற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

நவம்பர் மாதம் 2024 EICMA விழா துவங்கும் முன் ராயல் என்பீல்டு தனது எலெக்ட்ரிக் பைக் மாடலை அறிமுகம் செய்கிறது. புதிய எலெக்ட்ரிக் பைக் தொடர்பான காப்புரிமை படங்கள் ஏற்கனவே இணையத்தில் வெளியாகி இருந்தன.

அதன்படி ராயல் என்பீல்டு நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் பைக் அதிநவீன ரெட்ரோ-ஸ்டைலிங் கொண்டிருக்கும் என்று தெரியவந்தது. இந்த மாடலில் கிளாசிக் சீரிஸ் பைக்-ஐ நினைவூட்டும் பாகங்கள் அதிகளவில் இடம்பெறும் என்றும் தெரியவந்துள்ளது.

புதிய எலெக்ட்ரிக் பைக்கில் ராயல் என்பீல்டு நிறுவனம் அதிக திறன் கொண்ட பேட்டரி, நீண்ட ரேஞ்ச் வழங்கும் திறன் கொண்டிருக்கும் என்று தெரிகிறது. இந்த மாடலில் வழங்கப்பட இருக்கும் எலெக்ட்ரிக் மோட்டார் பற்றி எந்த தகவலும் இல்லை.

SCROLL FOR NEXT