கவாசகி இந்தியா நிறுவனம் தனது 2025 Z650 மோட்டார்சைக்கிளுக்கு அசத்தலான சலுகைகளை அறிவித்து இருக்கிறது. அதன்படி 2025 Z650 ஸ்டிரீட்-ஃபைட்டர் பைக்கை வாங்குவோருக்கு ரூ. 27,000 வரையிலான தள்ளுபடி வழங்கப்படுகிறது.
இந்த சலுகை மார்ச் 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள் 2025 கவாசகி Z650 மோட்டார்சைக்கிளை ரூ. 6,99,000, எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கிட முடியும்.
முன்னதாக இந்த தள்ளுபடிகள் கடந்த ஜனவரி மாதமும் அறிவிக்கப்பட்டு இருந்தது. பின்னர், இந்த சலுகை பிப்ரவரி மாதம் முழுக்க நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில், இந்த தள்ளுபடி சலுகை மார்ச் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இந்த சலுகை தொடர்ந்து நீட்டிக்கப்படும் நிலையில் கவாசகி நிறுவனம் 2025 மாடல்களின் ஸ்டாக் தீரும் வகையில் வழங்கப்படும் என்று தெரிகிறது.
இதுதவிர கவாசகி நிறுவனம் புதிய Z650 S பைக்கை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதும் இந்த சலுகை நீட்டிப்புக்கு காரணமாக இருக்கலாம். புதிய Z650 S மாடல் கவாசகி Z650 மாடலின் மேம்பட்ட வெர்ஷனாக இருக்கும் என்று தெரிகிறது.
தற்போதைய சலுகை தவிர்த்து, பைக்கில் வேறு எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை. அந்த வகையில் இந்த பைக்கில் 649சிசி, லிக்விட் கூல்டு, பேரலல் டுவின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யூனிட் 67 ஹெச்.பி. பவர் மற்றும் 64 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இந்த பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் யூனிட் உள்ளது.