பைக்

ரூ. 4.5 லட்சம் விலையில் புதிய ஹோண்டா ரிபெல் 500 இந்தியாவில் அறிமுகம்

ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோருக்கு போட்டியாக ஹோண்டா ரெபெல் 500 மாடல் அறிமுகம்.

ஹோண்டா நிறுவனத்தின் ரெபெல் 500 மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய பாபர் மாடல் மோட்டார்சைக்கிள் விலை ரூ. 4.5 லடசம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதோடு, ரெபெல் 500 இ-கிளட்ச் மாடலின் விலை ரூ. 4.9 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள், முந்தைய ரெபெல் 500 விற்பனை செய்யப்பட்ட விலையை விட மிகவும் குறைவாகும். ஓரளவிற்கு பைக்கை உள்நாட்டில் தயாரிப்பதன் மூலம் ஹோண்டா அதன் விலையை குறைத்துள்ளது.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

ஹோண்டா ரெபெல் 500 மாடலில் 471சிசி, லிக்விட்-கூல்டு, பேரலல்-ட்வின் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 8,500 ஆர்.பி.எம்.-இல் 46 ஹெச்.பி. பவரையும், 6,000 ஆர்பிஎம்மில் 43.3 நியூட்டன் மீட்டர் டார்க்கையும் உருவாக்குகிறது.

இந்த பைக்கின் வடிவமைப்பு அதன் மிகப்பெரிய சிறப்பம்சங்களில் ஒன்றாகும். தாழ்வான பாபர் வடிவமைப்பு, வெளிப்படையாக தெரியும் ஃபிரேம் மற்றும் சப்-ஃபிரேம், அத்துடன் வெளிப்புறமாக சரிந்திருக்கும் முன்பகுதி ஆகியவை இதற்கு மிகவும் தனித்துவமான தோற்றத்தை அளிக்கின்றன.

இதன் 690 செ.மீ. என்ற குறைந்த இருக்கை உயரமும், 191 கிலோகிராம் என்ற மொத்த எடையும், குள்ளமானவர்களுக்கும் கூட இதை ஓட்டுவதை எளிதாக்கும்.

ஹார்டுவேர் அம்சங்கள்:

ஹார்டுவேரை பொறுத்தவரை, இந்த பைக்கில் டெலஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஷாக் அப்சார்பர்களால் தாங்கப்படும் ஒரு ஸ்டீல் ஃபிரேம் உள்ளது. பிரேக்கிங் அமைப்பிற்கு இரு முனைகளிலும் ஒற்றை டிஸ்க் பிரேக் வழங்கப்படுகிறது, மேலும் டூயல்-சேனல் ஏபிஎஸ் தரநிலையாக வழங்கப்படுகிறது.

போட்டியை பொறுத்தவரை, ஹோண்டா ரெபெல் மோட்டார்சைக்கிள் ராயல் என்ஃபீல்டு சூப்பர் மீட்டியோர் 650 மாடலுக்கு போட்டியாக அமைகிறது.

SCROLL FOR NEXT