ஹோண்டா நிறுவனத்தின் CB500 இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஹோண்டா CB500 ஆரம்ப விலை ரூ. 2.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் மாடலுக்கான அதிகாரப்பூர்வ முன்பதிவுகளும் ஹோண்டா பிக்விங் டீலர்ஷிப்கள் மூலம் தொடங்கியுள்ளன.
இந்த மாடல் அறிமுகம் செய்யப்பட்டதுடன், ராயல் என்பீல்டு கிளாசிக் 500 மாடலுக்கு பிறகு இந்தியாவில் உள்ள ஒரே 500சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் கொண்ட பைக் என்ற பெருமையை ஹோண்டா சிபி500 பெற்று இருக்கிறது. இந்த மாடல் ஹோண்டா சிபி350 சீரிஸ்-க்கு மேலான நிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
மேலும், இதுவே ஒரே 500சிசி பெரிய சிங்கிள்-சிலிண்டர் பைக் என்பதால், அதன் அதிக முறுக்குவிசை கொண்ட தன்மையுடன், ஒரு சரியான ரெட்ரோ ஓட்டும் அனுபவத்தை விரும்பும் ஓட்டுநர்களை இது கவரக்கூடும்.
ஹோண்டா CB500, கடந்த ஜூலை மாத வாக்கில் பல ஹோண்டா மோட்டார்சைக்கிள்களுடன் சேர்த்து அறிமுகப்படுத்தப்பட்டது . இதில் 501சிசி, ஏர்/ஆயில் கூல்டு சிங்கிள் சிலிண்டர் என்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இந்த யூனிட் 27.6bhp பவர் மற்றும் 43.3Nm டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் இந்த விலையில் இது ராயல் என்ஃபீல்டு இன்டர்செப்டர் 650 மற்றும் பிஎஸ்ஏ கோல்டு ஸ்டார் 650 ஆகிய மாடல்களுக்குப் போட்டியாக இருக்கும்.
ஹோண்டா CB500 அலாய் வீல் வேரியண்ட் ரூ. 2,75,000
ஹோண்டா CB500 ஸ்போக் வீல் வேரியண்ட் ரூ. 2,99,900
ஹோண்டா CB500 ஸ்போக் மற்றும் ஸ்டிரைப் வேரியண்ட் ரூ. 3,01,900
அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.