பைக்

ஹோண்டா பைக்.. அட்வென்ச்சர், இ-ஸ்கூட்டர் போன்ற 10 வகை வேரியண்டுகள் அறிமுகம்

ஸ்கூட்டர்கள், ரோட்ஸ்டர்கள், க்ரூஸர்கள், அட்வென்ச்சர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய, ஏழு புதிய மாடல்கள் அறிமுகம்

ஹோண்டா மோட்டார் சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம், இருசக்கர வாகனங்களைக் கொண்ட தனது விரிவாக்கப்பட்ட தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய வரிசையில், ஸ்கூட்டர்கள், ரோட்ஸ்டர்கள், க்ரூஸர்கள், அட்வென்ச்சர் மோட்டார்சைக்கிள்கள், எலக்ட்ரிக் மொபிலிட்டி மற்றும் ஃப்ளெக்ஸ்-ஃப்யூயல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை உள்ளடக்கிய, ஏழு புதிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ஹோண்டா அட்வென்ச்சர்:

ஸ்கூட்டர் வரிசையில் புதிய ஹோண்டா ADV 160 முதலிடம் வகிக்கிறது. இது 160சிசி லிக்விட்-கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படும் என்றும், E85 எரிபொருளுடன் இணக்கமான இந்தியாவின் முதல் ஸ்கூட்டராக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இது 8. 1 லிட்டர் பெட்ரோல் டேங்கையும், இருக்கைக்கு அடியில் 27 லிட்டர் சேமிப்பு இடத்தையும் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர்கள் ஆயில் கூலருடன் கூடிய 501 சிசி சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு இன்ஜின் மூலம் இயங்கும். இது அலாய் வீல்கள், ஸ்போக் டியூப்லெஸ் வீல்கள் மற்றும் கிராபிக்ஸ் கொண்ட ஸ்போக் டியூப்லெஸ் வெர்ஷன் என மூன்று வேரியண்ட்டுகளில் வழங்கப்படும்.

ஹோண்ட CB:

இதனுடன், ஹோண்டா தனது CB350, CB350C மற்றும் CB350RS மாடல்களை, அவற்றின் தற்போதைய இயந்திர அமைப்புடன் புதிய வண்ணத்துடன் புதுப்பித்துள்ளது.

ரெபெல் 300 மற்றும் ரெபெல் 500 மாடல்கள், க்ரூஸர் வகை பைக்குகளின் வரிசையை விரிவுபடுத்தியுள்ளது. ரெபெல் 300 மாடல் 286சிசி லிக்விட் கூல்டு இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. இது ஸ்டாண்டர்ட் மற்றும் இ-கிளட்ச் வேரியன்ட்களில் வழங்கப்படும்.

ஹோண்டா XR:

சாகசப் பிரியர்களுக்கும் XR 300L மற்றும் XR 300 Rally என்ற இரண்டு பைக்குகள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. XR 300L, நகரப் பயன்பாடு மற்றும் மலைப்பாதை சவாரிகள் ஆகிய இரண்டிற்கும் ஏற்ற, எடை குறைந்த அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது ஆயில் கூலருடன் கூடிய 293.5cc காற்று குளிரூட்டப்பட்ட இன்ஜின் மூலம் இயக்கப்படுகிறது. XR 300 Rally அதே பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டிருந்தாலும், இது நீண்ட தூரப் பயணங்கள் மற்றும் கலவையான நிலப்பரப்பு சவாரிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹோண்டா மின்சார வாகனம்:

ஹோண்டா தனது மின்சார வாகன வரிசையை புதிய QC3 ஃபேமிலி ஸ்கூட்டருடன் விரிவுபடுத்தியுள்ளது. இது 3 kWh பேட்டரி பேக்குடன் சந்தைக்கு வர உள்ளது. மேலும் 151 கி.மீ. தூரம் வரை செல்லும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

இதை 2 மணி 40 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும். இதன் இருக்கைக்கு அடியில் 32 லிட்டர் கொள்ளளவு கொண்ட சேமிப்புப் பகுதி, ஸ்மார்ட் கீ மற்றும் இணைப்பு அம்சங்களுடன் கூடிய 5-இன்ச் TFT டிஸ்ப்ளே ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

விலை மற்றும் அறிமுகம்:

இந்த 10 வகை மாடல்களின் பைக்குகளின் விலைகள் மற்றும் சந்தை வெளியீட்டு கால அட்டவணைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் ஹோண்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.