பைக்

2025 ஜனவரி மாத பைக்குகள் விற்பனையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதலிடம் பிடித்து அசத்தல்

2025 ஜனவரி மாதத்தில் 4.42 லட்சம் பைக்குகளை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது.ராயல் என்பீல்டு நிறுவனம் 91,132 பைக்குகளை இந்தாண்டு ஜனவரி மாதம் விற்பனை செய்துள்ளது.

2025 ஜனவரி மாதத்தில் 4.42 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இது கடந்தாண்டை விட 141% அதிகமாகும்.

இந்த பட்டியலில் 3.97 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து டி.வி.எஸ். மோட்டார் நிறுவனம் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இது கடந்தாண்டை விட 17% அதிகமாகும்.

1.08 லட்சம் பைக்குகளை விற்பனை செய்து சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. இது கடந்தாண்டை விட 14% அதிகமாகும்.

கடந்தாண்டை விட 20% வளர்ச்சியுடன் ராயல் என்பீல்டு நிறுவனம் 91,132 பைக்குகளை இந்தாண்டு விற்பனை செய்துள்ளது.