ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் , சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் இன்டகிரேட்டட் பிரேக்கிங் சிஸ்டம் (ஐபிஎஸ்) ஆகியவற்றை இணைக்கும் புதிய பிரேக்கிங் சிஸ்டத்துடன் கிளாமர் எக்ஸ் 125 பைக்கை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது.
125சிசி பிரிவில், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் மற்றும் ஐபிஎஸ் உடன் வரும் முதல் மோட்டார்சைக்கிள் கிளாமர் எக்ஸ் 125 தான் என ஹீரோ நிறுவனம் கூறுகிறது. இந்த புதிய பிரேக்கிங் அமைப்பு, கடுமையாக பிரேக் செய்யும்போது முன் சக்கரங்கள் லாக் ஆவதைத் தடுக்கிறது.
அதே சமயம், ஐபிஎஸ் ஆனது முன் மற்றும் பின் பிரேக்குகளை இணைப்பதன் மூலம் பிரேக்கிங் செயல்திறனை மேம்படுத்துகிறது. மேலும், கிளாமர் எக்ஸ் மாடலில் பேனிக் பிரேக் அலர்ட் மற்றும் ஹசார்ட் லேம்ப்கள் போன்ற அம்சங்களும் தொடர்ந்து இடம்பெற்றுள்ளன.
ஹீரோ கிளாமர் எக்ஸ் பைக்கில் 124.7சிசி, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 11.4 பிஎச்பி பவரையு மற்றும் 10.5 நியூட்டன் மீட்டர் டார்க் உற்பத்தி செய்கிறது. இந்த பைக்கில் ஈகோ, ரோடு மற்றும் பவர் என மூன்று ரைடிங் மோட்கள் உள்ளன. மேலும், இந்த செக்மென்ட் பைக்கிற்கு முதல் முறையாக க்ரூயிஸ் கண்ட்ரோல் வசதியும் இதில் இடம்பெற்றுள்ளது.
ஹீரோ கிளாமர் எக்ஸ் 125, ப்ளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், மற்றும் அழைப்பு மற்றும் எஸ்.எம்.எஸ். அலெர்ட்களுடன் கூடிய வண்ண டி.எஃப்.டி. இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் வழங்கப்படுகிறது. ஃபுல்-எல்.இ.டி. லைட்கள், யு.எஸ்.பி. டைப்-சி சார்ஜிங் போர்ட் மற்றும் இருக்கைக்கு அடியில் இரட்டை மொபைல் ஸ்டோரேஜ் ஆகியவை மற்ற அம்சங்களில் அடங்கும்.
ஒருங்கிணைந்த ஏபிஎஸ் உடன் கூடிய கிளாமர் எக்ஸ், கன் மெட்டல் கிரே, மேட் ஆக்சிஸ் கிரே, பிளாக் பேர்ல் ரெட் மற்றும் பிளாக் டீல் ப்ளூ ஆகிய நான்கு வண்ணங்களில் கிடைக்கிறது. புதிய ஹீரோ பைக்கின் விலை ரூ. 1.01 லட்சம் (எக்ஸ்-ஷோரூம், டெல்லி) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.