பைக்

BMW | ஆடம்பர கார் விலையில் புது பைக் அறிமுகம் செய்த பி.எம்.டபிள்யூ.

மாலை மலர்

இந்த பைக்கில் எல்.இ.டி. ஹெட்லைட் செட்டப் உள்ளது.

பி.எம்.டபிள்யூ. நிறுவனம் இந்திய சந்தையில் 2026 M 1000 R மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. புதிய ஸ்டிரீட்ஃபைட்டர் பைக்கின் விலை இந்தியாவில் ரூ. 33 லட்சத்து 50 ஆயிரம் (எக்ஸ்-ஷோரூம்) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக் இந்தியாவுக்கு முழுமையாக உற்பத்தி செய்யப்பட்டு இறக்குமதி செய்யப்படுகிறது.

புதிய மாடல் என்பதால் இந்த பைக் தோற்றத்தின் அடிப்படையில் சில மாற்றங்கள், எலெக்ட்ரிக் முறையில் அப்கிரேடுகளுடன் விற்பனைக்கு வருகிறது. அதன்படி புதிய 2026 பி.எம்.டபிள்யூ. M 1000 R மாடலில் பாரம்பரிய M விங்லெட்கள், சற்றே ஆக்ரோஷ தோற்றம் கொண்ட டூயல்-ஃப்ளோ எல்.இ.டி. ஹெட்லைட் செட்டப் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த மாடலில் உள்ள விங்லெட்கள் பைக் மணிக்கு 220 கி.மீ. வேகத்தில் செல்லும் போது முன்பக்க சக்கரத்தின் சுமையை 11 கிலோ வரை அதிகப்படுத்தும்.

இந்த பைக்: லைட் வைட் / M மோட்டார்ஸ்போர்ட் (பேஸ் வேரியண்டில் மட்டும்), வைட் அலுமினியம் மெட்டாலிக் மேட் (பேஸ் மாடல், M காம்படீஷன் பேக்கேஜ் என இரண்டிலும் கிடைக்கும்) மற்றும் பிளாக்ஸ்டார்ம் மெட்டாலிக் / M மோட்டார்ஸ்போர்ட் (M காம்படீஷன் பேக்கஜில் மட்டும்) உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது.

எலெக்ட்ரிக் முறையில் இந்த பைக் தற்போது டைனமிக் டிராக்ஷன் கண்ட்ரோ்ல் சிஸ்டத்துடன் வருகிறது. இத்துடன் M குயிக்-ஆக்ஷன் திராட்டில் வழங்கப்பட்டுள்ளது. இந்த பைக்கில் M கார்பன் வீல்கள், கார்பன் ஃபைபர் பாடி பேனல்கள், செயின் கார்டு, டேன்க் கவர்கள், அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ரியர்செட் ஃபூட்-ரெஸ்ட்கள் மற்றும் M GPS லேப்டைமர் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய M 1000 R மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகள் நாடு முழுவதிலும் உள்ள பி.எம்.டபிள்யூ. மோட்டராட் விற்பனை மையங்களில் நடைபெற்று வருகிறது. விநியோகம் மே மாத வாக்கில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சந்தையில் இந்த பைக் டுகாட்டி ஸ்டிரீட்ஃபைட்டர் V4 மற்றும் அப்ரிலியா டுயோனோ V4 ஃபேக்டரி மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.