பைக்

அசத்தல் அப்டேட்களுடன் அறிமுகமான பல்சர் NS400Z TFT - விலை மற்றும் முழு விவரம்

பஜாஜ் பல்சர் NS400Z TFT மாடல் நான்குவித ரைடிங் மோட்களுடன் வருகிறது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 400 சிசி மோட்டார்சைக்கிள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. பஜாஜ் பல்சர் NS400Z என அழைக்கப்படும் புதிய மோட்டார்சைக்கிள் அதன் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் கனெக்டிவிட்டி அம்சங்களை மையமாகக் கொண்ட மற்றொரு அப்டேட் பெற்றுள்ளது.

மேம்படுத்தப்பட்ட பல்சர் NS400Z மோட்டார்சைக்கிளின் தற்போதைய விலை ரூ. 1,90,015 (எக்ஸ்-ஷோரூம் விலை) ஆகும். மேலும், இது கூகுள் மேப்ஸ் மிரரிங் வசதியுடன் கூடிய புதிய 5-இன்ச் TFT டிஸ்ப்ளேவை பெறுகிறது. இந்த அப்டேட்டில், பயனுள்ள உபகரணங்களின் பட்டியலில் யு.எஸ்.பி. டைப்-C சார்ஜிங் போர்ட் மற்றும் பேனிக் பிரேக் அலர்ட் ஆகியவற்றையும் சேர்க்கிறது.

பஜாஜ் பல்சர் NS400Z சிறப்பு அம்சங்கள்:

இதுவரை NS400Z-இல் பயன்படுத்தப்பட்டு வந்த, கண்ணாடியுடன் இணைக்கப்பட்ட வண்ண LCD-க்கு பதிலாக 5-இன்ச் TFT ஸ்கிரீன் பொருத்தப்பட்டுள்ளது. பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பதுடன், இந்த புதிய ஸ்கிரீன் கூகுள் மேப்ஸ் மிரரிங், மியூசிக் கண்ட்ரோல்கள், டாக்யூமென்ட் ஸ்டோரேஜ் மற்றும் லேப் டைமர் போன்ற அம்சங்களையும் வழங்குகிறது.

மேலும், இந்த புதிய பைக்-இல் பயனர்கள் நான்கு விதமான ரைடிங் மோட்கள மற்றும் டிராக்ஷன் கண்ட்ரோலை நிர்வகிக்க உதவுகிறது. அதிகமான ஸ்மார்ட்போன்களும், வாகன உபகரணங்களும் இந்த புதிய சார்ஜிங் தரத்திற்கு மாறிவரும் நிலையில், இந்த TFT திரையுடன் USB டைப்-C போர்ட்டும் வழங்கப்பட்டுள்ளது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமாகும்.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

பஜாஜ் பல்சர் NS400Z TFT மாடலில் 349சிசி லிக்விட் கூல்டு, 4-வால்வுகள் கொண்ட என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இந்த யூனிட் 40.6 பி.எஸ். பவர் மற்றும் 33.2 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும். இத்துடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது.

மேலும், திடீரென பிரேக் பிடிக்கும்போது கூடுதல் எச்சரிக்கை வழங்கும் நோக்கில், பஜாஜ் நிறுவனம் 'பேனிக் பிரேக் அலர்ட்' என்ற அம்சத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. செயல்பாட்டு ரீதியாக, இந்தப் புதுப்பிப்பில் பெரிய மாற்றம் எதுவும் இல்லை.

SCROLL FOR NEXT