பைக்

ரூ. 12.79 லட்சத்தில் 2027 கவாசகி Z1100 இந்தியாவில் அறிமுகம்

2027 கவாசகி Z1100 மோட்டார்சைக்கிள் ஒற்றை நிற ஆப்ஷனில் விற்பனைக்கு கிடைக்கிறது.

கவாசகி நிறுவனம் தனது சூப்பர் நேக்ட் பைக்: Z1100 மாடலின் 2027 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது . இந்த பைக்கில் என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று பார்த்தால், சொல்லப்போனால், ஒன்றுமே இல்லை.

புதிய பைக் மாடல் தொடர்ந்து ரூ. 12.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் விலை) என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

2027 கவாசகி Z1100 மோட்டார்சைக்கிள் எபோனி/மெட்டாலிக் கார்பன் கிரே என்ற ஒரே வண்ணத்தில் கிடைக்கிறது. இதன் தொழில்நுட்ப விவரங்கள் மாற்றமின்றி அப்படியே உள்ளன.

என்ஜின் மற்றும் செயல்திறன்:

2027 கவாசகி Z1100 பைக்கிலும், நின்ஜா 1100SX பைக்கில் பயன்படுத்தப்படும் 1,099cc லிக்விட்-கூல்டு இன்லைன்-ஃபோர் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின், 136bhp பவர் மற்றும் 113Nm டார்க் வெளிப்படுத்துகிறது. இந்த என்ஜின், அசிஸ்ட்-அண்ட்-ஸ்லிப்பர் கிளட்ச் மற்றும் பை-டைரக்ஷனல் குயிக் ஷிஃப்டர் பொருத்தப்பட்ட 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சேஸிஸை பொறுத்தவரை, கவாசகி ஒரு அலுமினிய ஃபிரேமை பயன்படுத்தியுள்ளது. இதன் சஸ்பென்ஷன் அமைப்பில், முழுமையாக அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஷோவா USD ஃபோர்க் மற்றும் ஒரு மோனோஷாக் ஆகியவை அடங்கும். முன்பக்கத்தில் உள்ள இரட்டை 310mm டிஸ்க்குகள் மூலம் பிரேக்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது.

ஹார்டுவேர் அம்சங்கள்:

தொழில்நுட்பத்தைப் பொறுத்தவரை, Z1100 மாடலில் உள்ள 5 இன்ச் TFT டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இதில் IMU அடிப்படையிலான 3-லெவல் டிராக்‌ஷன் கண்ட்ரோல், இரண்டு பவர் மோட்கள், கார்னரிங் ஏ.பி.எஸ்., க்ரூயிஸ் கண்ட்ரோல் மற்றும் க்விக்ஷிஃப்டர் ஆகியவை உள்ளன. மேலும், ப்ளூடூத் கனெக்டிவிட்டி வசதியையும் வழங்கப்படுகிறது. இதன் மூலம் டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், கால் அலெர்ட்கள் மற்றும் மெசேஜ் நோட்டிபிகேஷன் வசதி வழங்கப்படுகிறது.

இந்தியாவில், கவாசகி Z1100 மோட்டார்சைக்கிள் ஹோண்டா CB1000 ஹார்னெட் SP உடன் போட்டியிடுகிறது.

SCROLL FOR NEXT