மிதுனம்
திருப்புமுனையான வாரம். பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சுக்கிரன் லாப ஸ்தானத்தில் நின்று பூர்வ புண்ணிய ஸ்தானத்தை பார்க்கிறார். புத்தி சாதுர்யத்தால் வியாபாரத்தை பெருக்குவீர்கள். நடக்குமா என்று இருந்த காரியங்களை தன்னம்பிக்கையோடு நடத்தி காட்டுவீர்கள். சாதாரண நிலையில் இருப்பவர்கள் கூட உயர்நிர்வாக பதவி, உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். புதிய நட்புக்களால் ஆதாயம் உண்டாகும். வழக்கறிஞர், அரசியல்வாதிகள், ஜோதிடர்கள், ஆசிரியர்கள், மார்க்கெட்டிங் துறை, ஊடகங்கள், போன்றவற்றில் இருப்பவர்களுக்கு பலன்கள் இரட்டிப்பாகும்.
பயணங்களால் வெற்றி உண்டாகும். சில மாணவர்கள் உயர் கல்விக்காக வெளியூர் அல்லது வெளிநாடு செல்லலாம். எதிரிகள் விலகுவார்கள். மருமகனால் ஏற்பட்ட மன உளைச்சல் குறையும். குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். 10.4.2026 அன்று மாலை 6.04 க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் உச்ச கட்ட கோபத்தை வெளிக்காட்டுவீர்கள். ஸ்ரீ காஞ்சி மகா பெரியவரை வழிபடவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406