ராசிபலன்

கடகம்- வார ராசிபலன் 3.5.2026 முதல் 9.5.2026 வரை

விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுவர்.

கடகம்

வாழ்க்கை தரம் உயரும் வாரம். வெகு விரைவில் குரு பகவான் ராசிக்குள் நுழைந்து உச்சம் அடைவதால் தரித்திரம், அவமானம், பண நெருக்கடி, தொழில் முடக்கம், நஷ்டம், உத்தியோகத்தில் ஏற்பட்ட நிலையற்ற தன்மை விலகத்துவங்கும். எதை எப்படி செய்ய வேண்டும், எதிரியை எப்படி வீழ்த்த வேண்டும் என்று தெளிந்து செயல்படுவீர்கள். அன்றாடம் அழியக் கூடிய பொருட்களான காய்கறி, பழம் வியாபாரம், மளிகைக்கடை, பால், தயிர், குளிர் பானங்கள் போன்ற பொருட்களை விற்பவர்களுக்கு வாழ்வியல் முன்னேற்றம் உண்டாகும்.

விவசாயம், கால்நடை வளர்ப்பு தொழிலில் உள்ளவர்கள் ஏற்றம் பெறுவர். தொழிலுக்காக வாங்கிய கடனை சிறிது சிறிதாக அடைக்க முயற்சிப்பீர்கள். ராசிக்கு இரண்டில் கேதுவும் எட்டில் ராகுவும் நிற்பதால் திருமண முயற்சியில் முன்னுக்கு பின் முரணான பதில் கிடைக்கும். சிலருக்கு அரசியல் ஈடுபாடு அதிகரிக்கும். தம்பதிகள் விட்டுக் கொடுத்து செல்வதால் பெரிய சிரமங்கள் ஏற்படாது. திங்கட்கிழமை சிவனை வணங்க காரிய வெற்றி உண்டாகும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406