ராசிபலன்

மீனம்- வார ராசிபலன் 3.5.2026 முதல் 9.5.2026 வரை

சில பிரச்சனைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

மீனம்

நினைப்பதெல்லாம் நடைபெறும் அற்புதமான வாரம். ராசியில் உள்ள ஜென்ம சனிக்கு வெகு விரைவில் குரு பார்வை கிடைக்கப் போகிறது அதன் பலன் தற்போது தெரிய துவங்கும். குல தெய்வமே குழந்தையாய் வந்து பிறக்கும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகமான நன்மைகள் உண்டு. வேலை செய்யுமிடத்தில் விரும்பிய மாற்றங்கள் உண்டு. ஜென்மச் சனியின் தாக்கம் வெகுவாக குறையும். வியாதிகளால் ஏற்பட்ட தாக்கம் குறையும். அனைத்து பணிகளிலும் உங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வீர்கள்.

முறையான ஆவணங்கள் உள்ள சட்டரீதியான சொத்து, வாஸ்து குற்றம் இல்லாத வீடு, மனை உங்களுக்கு கிடைக்கும். மனதிலிருந்த இனம் புரியாத பயம் விலகி தெளிவும், துணிவும் பிறக்கும். விரோதிகளால் உண்டான கெடுதல்கள், தொல்லைகள் விலகி வாழ்வில் நிம்மதி பிறக்கப் போகிறது. நீண்ட காலமாக தீர்க்க முடியாத சில பிரச்சனைகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்க முடியும். மகளுக்கு விரும்பிய விதத்தில் வரன் அமையும். சிவனடியார்களுக்கு உணவு உடை தானம் வழங்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406