ராசிபலன்

தனுசு- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை

அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும்.

தனுசு

சுகபோக வாழ்க்கை உண்டாகும் வாரம். 11-ம்மிடமான லாப ஸ்தானத்திற்கு குரு மற்றும் சுக்ரன், செவ்வாய் பார்வை உள்ளது. தாய், தந்தை வழி உறவுகளின் அன்பும், அரவணைப்பும் கூடும். பதினாறு வகைச் செல்வங்களும் நிரம்பும். சிறிய உழைப்பில் நல்ல வருமானம் கிடைக்கும். அரசுத் துறை வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் வெற்றி உறுதி. பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற்றம் காண்பார்கள். கணவருடனான ஒற்றுமை நன்றாக இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் ஏற்றம் உண்டாகும்.

அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு அதிகாரிகளின் அன்பு மற்றும் ஆதரவால் பணி உயர்வு நினைத்தபடி கிடைக்கும். லவுகீக விசயங்களில் நாட்டம் அதிகரிக்கும். தந்தை வழியில் இருந்த பிரச்சினைகள் சங்கடங்கள் விலகி மகிழ்ச்சி உண்டாகும். 29.3.2026 அன்று நள்ளிரவு 2.38 மணிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வாக்கில் நிதானம் தேவை. குடும்ப உறவுகளிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். பங்குனி உத்திரம் அன்று சிவனுக்கு பன்னீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406