ராசிபலன்

விருச்சிகம்- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை

வரா கடன்கள் வசூலாகும். திருமணம், சுபகாரியம் தொடர்பாக பேசலாம்.

விருச்சிகம்

தடைபட்ட பணிகள் துரிதமாகும் வாரம். ராசி அதிபதி செவ்வாய் வார இறுதியில் பூர்வ புண்ணிய ஸ்தானம் செல்கிறார். சிலர் நல்ல திட்டம் போட்டு புதிய தொழில் துவங்குவார்கள். உத்தியோகஸ்தர்கள் கடமை தவறாமல் உழைப்பார்கள். கூலித் தொழிலாளிகளுக்கு தொடர்ந்து வேலைவாய்ப்புகள் கிடைக்கும். பிள்ளைகளுக்கான சுப செலவு அதிகரிக்கும். கடனாலும், நோயாலும், வம்பு வழக்காலும் பட்ட அவஸ்தை குறையத் துவங்கும். கொடுக்கல் வாங்கல், சுமூகமாகும்.

வரா கடன்கள் வசூலாகும். திருமணம், சுபகாரியம் தொடர்பாக பேசலாம். பூர்வீகச் சொத்து தொடர்பாக உடன் பிறந்தவர்களுடன் பேசி பாகப் பிரிவினை செய்ய உகந்த நேரம். அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் ஆவணங்கள் கிடைப்பதில் தடை, தாமதம் ஏற்படக்கூடும். நிலையான வருமானத்திற்காக புதிய திட்டங்களைத் தீட்டுவீர்கள். பழைய கடன்கள் வசூலாகும். பங்குனி உத்திரம் நட்சத்திர நாளில் சிவனுக்கு தயிர் அபிசேகம் செய்து வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406