ராசிபலன்

துலாம்- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை

கடன் தொல்லை விலகும். தொழில் சிறப்பாக நடக்கும். கூட்டம் கூடும்.

துலாம்

விவேகத்துடன் செயல்பட்டு இலக்கை அடையும் வாரம். ராசி அதிபதி சுக்கிரன் தன் வீட்டை தானே பார்க்கிறார். இதுவரை குடும்பத்திலிருந்த பிரச்சினைகள், தொழில் ரீதியாக சந்தித்த பாதிப்புகள் விலகும். புதிய தொழில் கூட்டாளிகள் கிடைப்பார்கள். சில அண்ணன் தம்பிகள் இணைந்து புதிய கூட்டுத் தொழில் துவங்கலாம். திருமணத் தடை அகலும். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் மிகச் சிறப்பாகச் செய்து பாராட்டுகளைப் பெறுவீர்கள்.

கடன் தொல்லை விலகும். தொழில் சிறப்பாக நடக்கும். கூட்டம் கூடும். தொழிலில் வருமானம், லாபம் அதிகமாக இருப்பதால் உழைக்கும் ஆர்வம் அரிகரிக்கும். உறவினர்கள் வருகையால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் நிலவிய சங்கடங்கள் விலகும். ஆசைகளால் மனம் அலைபாயும். விரயங்களும் ஏற்படும். எனவே கவனத்துடன் செயல்பட்டு வெற்றியைக் காணுங்கள். பங்குனி உத்திரத்தன்று சிவனுக்கு இளநீர் அபிசேகம் செய்து வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406