ராசிபலன்

மகரம்- வார ராசிபலன் 29.3.2026 முதல் 4.4.2026 வரை

ஆழ்மன சிந்தனை பெருகும். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு.

மகரம்

கடமையில் கண்ணும் கருத்துமாக செயல்படும் வாரம். ராசிக்கு நான்காம் இடமான சுகஸ்தானத்தில் சுக்ரன் நிற்பதால் ஆடம்பரமான சொத்துக்கள் சேரும். விவசாயம், ரியல் எஸ்டேட், கால்நடை வளர்ப்பவர்களுக்கு சிறிய முயற்சியில் அதிக வருமானம் கிடைக்கும். உழைக்காத வருமானம் உண்டு. பயன்படுத்த முடியாமல் கிடந்த முன்னோர்களின் சொத்துகளால் ஆதாயம் உண்டாகும். தடைபட்ட வாடகை வருமானம் வரத்துவங்கும். வாழ்க்கை முன்னேற்றம், தொழில் தொடர்பான சிந்தனை, சுய முயற்சி எப்பொழுதும் இருந்து கொண்டே இருக்கும்.

ஆழ்மன சிந்தனை பெருகும். அரச பதவி, அரசு உத்தியோகம், அரசு வகை ஆதரவு உண்டு. புதிய கொள்முதல் மூலமாக தொழிலில் அதிகமான வருவாய் பெருகும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். 29.3.2026 அன்று நள்ளிரவு 2.38 முதல் 31.3.2026 அன்று இரவு 9.33 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிலருக்கு கடன் தொல்லை சர்ஜரி, வம்பு, வழக்கு வரலாம். முதலீட்டாளர்கள் எச்சரிக்கையாக நிதானத்துடன் இருக்க வேண்டும். பங்குனி உத்திரம் அன்று பால் அபிசேகம் செய்து சிவனை வழிபடவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406