ராசிபலன்

தனுசு- வார ராசிபலன் 19.4.2026 முதல் 25.4.2026 வரை

இல்லத்தில் பிள்ளைகளின் சுப விசேஷத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும்.

தனுசு

அமைதியான வாரம். ராசிக்கு ராசி அதிபதி குருவின் பார்வை சில வாரங்களுக்கு மட்டுமே கிடைக்கப் போகிறது அதன் பிறகு அஷ்டம ஸ்தானத்தில் ராசி அதிபதி குரு பகவான் உச்சமடைய போகிறார் முக்கிய பணிகளை விரைந்து முடிப்பது நல்லது. வழக்குகளில் தீர்ப்பு சாதகமாகும். பொருளாதார நெருக்கடிகள் குறையத் துவங்கும்.

பல்வேறு வெற்றிகளைக் குவிக்கும் யோகமுண்டாகும். தொழில் அபிவிருத்திக்கு எடுக்கும் முயற்சிகள் வெற்றி தரும். அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பணி நிரந்தரம் ஆகாதவர்க ளுக்கு வேலை நிரந்தரமாகும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவிகள் தக்க நேரத்தில் கிடைக்கும்.

புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். இல்லத்தில் பிள்ளைகளின் சுப விசேஷத்திற்கான பேச்சு வார்த்தைகள் நடக்கும்.23.4.2026 பகல் 3.13 மணி முதல் 25.4.2026 அன்று இரவு 8.01 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. உடல் அசதி அதிகரிக்கும்.தினமும் விநாயகர் கவசம் படிப்பது நல்லது.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406