சிம்மம்
மகிழ்ச்சியான வாரம். தன ஸ்தானத்திற்கு செவ்வாய், சனி, புதன் பார்வை உள்ளது. உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். பேச்சுகளில் அனுபவம் வெளிப்படும். தோற்றப் பொலிவு, ஆரோக்கியம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். தனவரவு மகழ்ச்சி கடலில் ஆழ்த்தும்.
அஷ்டமச் சனியை மீறிய நல்ல பலன் கிடைக்கத் துவங்கும். பொருளாதார நிலையில் இதுவரை கண்டிராத அளவிற்கு மிகப் பெரிய வளர்ச்சி ஏற்படும். உங்களின் தொழில், குடும்ப சொத்து, வராகடன் வசூல் என பல்வேறு வழிகளில் பணம் வந்து குவியும். தொழிலில் சிறுசிறு மாற்றங்கள் மூலம் சாதகமான வாய்ப்புகள் தேடி வரும்.
வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். உயர் அதிகாரி களின் ஆலோசனைகளை ஏற்று நடக்கவும். தாய் வழி உறவுகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வீடு வாகன பழுதுகளை சரி செய்வீர்கள். குடும்பத்தில் வீண் விவாதங்களை தவிர்க்கவும். தினமும் ஆதித்ய ஹிருதயம் கேட்கவும் அல்லது படிக்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406