கடகம்
திட்டமிட்ட செயல்களில் சாதகமான சூழல் அமையும் வாரம்.ராசிக்கு 10-ல் தன ஸ்தான அதிபதி சூரியன் உச்சம் பெற்று உள்ளார்.வியாபாரத்தில் புதிய தொடர்புகள் கிடைக்கும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். செயல்பாடுகளில் நிலவி வந்த ஆர்வமின்மை குறையும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
வீடு வாகன வசதியை மேம்படுத்தும் எண்ணங்கள் உதயமாகும்.தன வரவுகளில் இருந்த நெருக்கடிகள் குறையும். கடந்த சில மாதங்களாக அனுபவித்து வந்து கடன், எதிரி, நோய் தொல்லை, விரயம்,கூட்டுத் தொழில், நண்பர்கள் மற்றும் வாழ்க்கைத் துணையால் ஏற்பட்ட மன உளைச்சல் தீரும் காலம் வந்து விட்டது. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பணி நிமித்தமான சில பொறுப்புகள் அதிகரிக்கும். உறவினர்களுடன் சுப விசே ஷங்களில் கலந்து கொள்வீர்கள். காணாமல் போன தவறிப் போன சில பொருட்கள் பற்றிய தகவல்கள் கிடைக்கும். வெளியூர் பயணங்களில் நிலவி வந்த தடைகள் அகலும்.எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். தினமும் காலையில் கனகதாரா ஸ்தோத்திரம் கேட்கவும்.
‘பிரசன்ன ஜோதிடர்’
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406