ராசிபலன்

மேஷம்- வார ராசிபலன் 19.4.2026 முதல் 25.4.2026 வரை

கடந்த கால கடனை குறைக்க முயற்சிப்பீர்கள்.

மேஷம்

உழைப்பிற்கான அங்கீகாரம் கிடைக்கும் வாரம்.ராசியில் பூர்வ புண்ணிய ஸ்தான அதிபதி சூரியன் உச்சமடைந்து நிற்கிறார். வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறுவீர்கள். பொதுப் பணியில் உள்ளவர்களுக்கு பொதுஜன ஒத்துழைப்புகள் கிடைக்கும். செயல் திறன் கூடும். முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மனதளவில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள்.

பெரிய மனிதர்களின் நட்புகள் உற்சாகத்தை கூட்டும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். புதிய பதவிகள் கிடைக்கும். நீண்ட காலமாக மனதை உறுத்திக் கொண்டிருந்த சில விஷயங்களுக்கு தெளிவுகள் கிடைக்கும். எதிர்கால சேமிப்புகள் குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். தந்தையின் அன்பும் ஆசீர்வாதமும் உங்களை மகிழ்விக்கும்.

சொந்த வீடு,வாகன கனவு நிறைவேறும். ஆடம்பர பொருட்கள், ஆபரணங்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். தன வரவில் நிலவிய தடைகள் அகலும். கடந்த கால கடனை குறைக்க முயற்சிப்பீர்கள்.தினமும் கந்த சஷ்டி கவசம் கேட்கவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406